திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 56 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 47 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.
இவர்களைத் தொடர்ந்து கோயம்பேடு, இதர மாவட்டம், மாநிலங்களில் இருந்து திருச்சிக்கு வந்த ஐந்து பேர் உள்பட ஆறு பேர் புதிதாக தொற்று ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் என ஐந்து பேர் குணமடைந்து இன்று வீட்டிற்கு திரும்பினர். அவர்களை திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு பேர், அரியலூரைச் சேர்ந்த ஒன்பது பேர், பெரம்பலூரைச் சேர்ந்த 12 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த இரண்டு பேர் என மொத்தம் 29 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் உடல்நிலை நல்ல நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.