தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தினந்தோறும் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி மாவட்டத்திலும் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதற்கிடையில் நேற்று (ஜூலை1) ஒரே நாளில் 34 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 701ஆக அதிகரித்துள்ளது.
இதில் 369 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சியில் அதிகரிக்கும் கரோனா தொற்று மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.