திருச்சி: மணப்பாறையில் அரசு வழக்கறிஞராக இருந்து வருபவர் முரளி கிருஷ்ணன். இவர் கடந்த 20ம் தேதி இரவு ஏழு மணியளவில் தனது அலைபேசியில் ட்விட்டர் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது @katterumbu-bjp என்ற ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி இராஜேந்திர பாலாஜி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை பற்றியும் தற்போதைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குறித்தும் அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசிய காணொளியை பார்த்துள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் முன்னாள் அமைச்சர் மீதும், அதை பதிவிட்ட ட்விட்டர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் இராமநாதனிடம் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: விமான கழிவறையில் தங்க பிஸ்கட் பறிமுதல் - சுங்கத்துறை விசாரணை