ETV Bharat / state

கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறப்பு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு திருச்சி மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

v
v
author img

By

Published : Nov 9, 2021, 12:47 PM IST

திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோரையாறு, உய்யக்கொண்டான் வாய்க்கால், குடமுருட்டி உள்ளிட்ட வாய்க்கால்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் திருச்சி மாநகர பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேட்டூர் அணை நிரம்பும் சூழ்நிலையில் உள்ளது. அதனால் மேட்டூரில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் திருச்சிக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் நிலை உள்ளது.

உள்ளூர் மழை வெள்ளம் மற்றும் மேட்டூர் அணை நீர்வரத்து காரணமாக காவிரி ஆற்றில் அதிக அளவில் நீர் செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றிலிருந்து 10 ஆயிரம் கனஅடி நீரை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு திறந்து வைத்தார்.

இதையடுத்து ஆட்சியர் சிவராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, " கர்நாடகா, கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட பெருமளவு தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது.

மேலும் கோரையாறு, குடமுருட்டி ஆற்றில் வெள்ள நீர் வந்து கொண்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையானது அதன் முழுக்கொள்ளளவான 118 அடியை எட்டும் நிலையில் உள்ளது.

எனவே,வெள்ள பாதுகாப்பு கருதி முக்கொம்பு மேலணை தடுப்பணையிலிருந்து 10,000 கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றிலிருந்து நவம்பர் 8ஆம் தேதி மாலையிலிருந்து மணிக்கு திறந்துவிடப்படுகிறது.

எனவே கரையோர கிராமங்களில் உள்ள மக்கள், சலவைத் தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

காவிரியில் அதிக நீர்வரத்து வந்துகொண்டிருக்கும் தற்போதைய நிலையில் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பற்ற கரையோரங்கள், ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ "செல்பி" (selfie) எடுக்க அனுமதி இல்லை.

வெள்ள அபாயம் ஏற்பட்டால் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். 93840 56213 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பலாம். மேலும் வட்டாட்சியர்களை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள தெரிவிக்கலாம். TN- SMART என்ற செயலியின் மூலமும் தகவல் தெரிவிக்கலாம்" என செய்திக்குறிப்பில் ஆட்சியர் சிவராசு குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கொள்ளிடம் கனமழை பாதிப்பு: ஐஜி ஜெயராமன் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.