ETV Bharat / state

என்னுடைய நேரத்துல நீ ஏன் வண்டிய எடுத்த? - அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்குள் வாக்குவாதம் - மணப்பாறை பேருந்து ஓட்டுநர்கள் மோதல்

திருச்சி மணப்பாறையில் பயணிகளை ஏற்றுவதில் இரண்டு அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Etv Bharat அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மோதல்

author img

By

Published : Aug 6, 2022, 4:24 PM IST

திருச்சி: கம்பத்திலிருந்து திருச்சி நோக்கி அரசு பேருந்து ஒன்று மணப்பாறை பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தது. அப்போது, அதே நேரத்தில் பழனியில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தது.

இதனைக் கண்டு கடுப்பான கம்பம் பேருந்து ஓட்டுநர், பழனி பேருந்து ஓட்டுநரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், பொதுவெளி என்றும் பாராமல் பழனி பேருந்து ஒட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி ஒருமையில் பேசினார்.

நேற்று (ஆக.05) மாலை நடந்த இந்த சம்பவம் குறித்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மோதல்

இதையும் படிங்க: ‘எனது 3 மகன்களும் போலீஸில் வேலை செய்கிறார்கள்’.. நிலமோசடி தொடர்பாக மிரட்டல் விடுத்த குடும்பத்தினர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.