ETV Bharat / state

நேருவிற்கு எதிராக பொங்கிய குமார் !- சொத்து கணக்கு கூறி சவால்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் நடித்து , மக்களை ஏமாற்றி வருகிறார் என அதிமுகவின் முன்னாள் எம்.பி ப.குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

’மக்களிடம் நடித்து வருகிறார் மு.க.ஸ்டாலின்’ - முன்னாள் எம்.பி ப.குமார்

author img

By

Published : May 2, 2022, 11:10 PM IST

இந்தியாவில் சென்னை மாநகரில் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும், தலைசிறந்த சீர்திருத்தவாதியுமான ம. சிங்காரவேலர் 1923ல் சென்னை கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார். உழைக்கும் வர்க்கத்தினரைப் பெருமைப்பட வைக்கவேண்டி பின்னர் அரசு விடுமுறை நாளாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் உழைப்பாளர்களைப் பெருமைப்படுத்தி கெளரவித்து வந்தார்கள். இது காலப்போக்கில் அரசியல்வாதிகள் தங்கள் எதிர்க்கட்சியினரைத் திட்டும் அரங்காக மாறிப்போனது. அப்படி ஒரு நிகழ்வுதான் நேற்று திருச்சியில் பேசு பொருளாகி இருக்கிறது.

திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக் கூட்டம் திருவெறும்பூரில் நேற்று(ஏப்.1) இரவு நடைபெற்றது.

’மக்களிடம் நடித்து வருகிறார் மு.க.ஸ்டாலின்’ - முன்னாள் எம்.பி ப.குமார்

திமுகவை வெளியேற்ற வேண்டும்: இந்தக் கூட்டத்தில் , ப.குமார் அதிமுக முன்னாள் எம்.பி பேசும் பொழுது, ”தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 505 பொய்யான வாக்குறுதிகளை திமுக அளித்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு ஒன்றுமே செய்யாமல் மக்களிடம் நடித்து வருகிறார். திமுக அரசை வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஓராண்டிலேயே காண முடிகிறது.

வரும் தேர்தலில் திமுகவின் மாயை வெற்றியை முறியடித்து அதிமுக மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றும். சிறு, குறு தொழிலாளர்களின் மேம்பாட்டுக்குக் குழு அமைக்கப்படும். அரைவட்ட சுற்றுச்சாலை , சர்வீஸ் சாலை அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட திருவெறும்பூர் தொகுதிக்காகத் தேர்தல் அறிக்கையில் திமுக தெரிவித்த எதையும் இத்தொகுதியின் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நிறைவேற்றவில்லை.

மக்களிடம் நடித்து வருகிறார் ஸ்டாலின்: திருச்சியைச் சேர்ந்த அமைச்சர் கே.என்.நேரு மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இரு வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. கேர் கல்லூரி கடனில் மூழ்கிவிட்டது. ஆனால் பத்தே மாதத்தில் இதனை மீட்டுவிட்டார் என்றால் ஸ்டாலினிடம் எவ்வளவு கோடி இருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள் . இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது போலீஸாரும் நேருவும் என் மீது வழக்கு போட்டாலும் சந்திக்கத் தயார்.

பஞ்சப்பூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என நேரு கூறுகிறார். அதற்கு அருகிலுள்ள இரட்டைமலை பகுதியில் அவருக்கு சொந்தமான 150 ஏக்கர் நிலம் உள்ளது . இந்த இடத்தின் மதிப்பை அதிகரிக்க பஞ்சப்பூரிலிருந்து திண்டுக்கல் சாலையை இணைக்க இணைப்புச் சாலை அமைக்கப்படும் எனக் கூறுகிறார் . ஓராண்டுக்குள் ரூ.200 கோடி மதிப்பீட்டில் சொத்து வாங்கியுள்ளார். கடந்த திமுக ஆட்சியில் நாளொன்றுக்கு 18 மணி நேரம் மின்தடையை மக்கள் அனுபவித்தனர். தற்போது மீண்டும் அந்த நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: என்னைக் கைது செய்தது பிரதமர் அலுவலகத்தின் திட்டமிட்ட சதி - ஜிக்னேஷ் மேவானி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.