ETV Bharat / state

‘பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜிஎஸ்டி வரிகளை உயர்த்த மத்திய அரசு திட்டம்’ - ப.சிதம்பரம்

திருச்சி: பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அனைத்து வகையான ஜிஎஸ்டி வரிகளையும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Chidambaram
Chidambaram
author img

By

Published : Dec 8, 2019, 1:05 PM IST

Updated : Dec 8, 2019, 1:25 PM IST

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ‘இந்தியாவின் பொருளாதாரம் மிக மிக மோசமான நிலையில் உள்ளது. பணமதிப்பிழப்புக்கு முன்பு அன்றாட கூலி தொழிலாளிகளுக்கு மாதம் 23 நாட்கள் வரை வேலை கிடைத்தது. ஆனால், தற்போது சுமார் 30 கோடி கூலி தொழிலாளிகளுக்கு மாதம் 12 முதல் 15 நாட்கள்தான் வேலை கிடைக்கிறது.

மாதத்தில் பாதி நாட்கள் மட்டுமே வேலை கிடைப்பதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வருமானம் குறைவினால் நுகர்வு என்பது 24 சதவீதம் குறைந்துள்ளது. வாங்கும் சக்தியை மக்கள் இழந்ததால் உற்பத்தியும் குறைந்துவிட்டது.

ரயில்வே துறையை தனியார் மயமாக்க நீண்ட நாட்களாகும். அதுவரை பாஜக ஆட்சியில் இருக்காது. மத்திய அரசு திறமையற்ற நிர்வாகம் என உலகப் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். நாளுக்கு நாள் அதை அவர்களும் நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடமிருந்து 1.5 லட்சம் கோடி ரூபாயை மிரட்டி வாங்கி கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலாளிகளுக்கு வரிச்சலுகை அளித்துள்ளது.

இப்போதும் பற்றாக்குறை உள்ளதால், அடுத்து வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அனைத்து விதமான வரிகளையும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 5% உள்ள வரியை 8%, 8% உள்ள வரியை 12%, 12% உள்ள வரியை 15% உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.

ப. சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் பிழை இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. தொகுதி வரையறை, இட ஒதுக்கீடு போன்றவற்றில் குறைபாடுகள் இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் தொடர்பாக திமுக மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது.

மத்திய அரசானது போண்டி நிலையில் தற்போது உள்ளது. அவர்களிடம் பணம் கிடையாது, அதனால் அவர்களால் ஏழைகளுக்கு எதுவும் செய்ய முடியாது. மத்திய அரசிடம் உள்ள நிதி ஆதாரத்தைக் கொண்டு விவசாய கடன் தள்ளுபடி செய்யமுடியாது. மாநில அரசுகளிடமுள்ள நிதியை கொண்டு தான் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய முடியும். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மாபெரும் வெற்றியை பெற்ற மத்திய அரசு மக்களுக்கு துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறது’ என்றார்.

இதையும் படிங்க: டெல்லி தீ விபத்து: பிரதமர், கெஜ்ரிவால், ராகுல் இரங்கல்!

Intro:பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அனைத்து வகையான ஜிஎஸ்டி வரிகளையும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று ப.சிதம்பரம் கூறினார்.
Body:
திருச்சி: பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அனைத்து வகையான ஜிஎஸ்டி வரிகளையும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று ப.சிதம்பரம் கூறினார்.

திகார் சிறையில் இருந்து விடுதலையான பின்னர் முதன்முறையாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சென்னையிலிருந்து இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் காங்கிரஸ், திமுக கட்சியினர் திரளாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவிற்கு வரும் அகதிகளை ஏற்றுக் கொள்வதா? ஏற்றுக் கொள்ளுவதில்லையா? அவர்களுக்கு எந்த வகையான நிபந்தனைகளை வரையறை செய்வது போன்றவற்றுக்கு தனிச்சட்டம் தேவை. ஆனால் தற்போது இந்தியாவில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மத அடிப்படையிலான பாகுபாட்டை ஏற்க முடியாது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை இறுதி முடிவு எடுத்து அறிவிக்கும். இந்தியாவின் பொருளாதாரம் மிக மிக மோசமான நிலையில் உள்ளது. அன்றாட கூலி தொழிலாளியான 30 கோடி பேர் மாதத்திற்கு 12 முதல் 15 நாட்கள்தான் வேலை கிடைக்கிறது. பணமதிப்பிழப்புக்கு முன்பு 23 நாட்கள் வரை வேலை கிடைத்தது. தற்போது பாதி நாட்கள் மட்டுமே வேலை கிடைப்பதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வருமானம் பாதித்து நுகர்வு என்பது 24 சதவீதம் குறைந்துள்ளது. வாங்கும் சக்தியை மக்கள் இழந்ததால் உற்பத்தியும் குறைந்து விட்டது.
ரயில்வே துறையை தனியார் மயமாக்க நீண்ட நாட்களாகும். ஆனால் அதுவரை இவர்கள் இருக்கமாட்டார்கள். மத்திய அரசு திறமையற்ற நிர்வாகம் என்று உலக பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர். இதை நாளுக்கு நாள் இவர்கள் நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள். ரிசர்வ் வங்கியிடமிருந்து 1.5 லட்சம் கோடி ரூபாயை மிரட்டி வாங்கி கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலாளிகளுக்கு வரிச்சலுகை அளித்துள்ளனர். இப்போதும் பற்றாக்குறை உள்ளது. அதனால் அடுத்து வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அனைத்து விதமான வரிகளை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 5% உள்ள வரியை 8 சதவீதமாகவும், 8% உள்ள வரியை 12 சதவீதமாகவும், 22% உள்ள வரியை 15 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளனர். தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் பிழை இருப்பதாக புகார் எழுந்துள்ளது. தொகுதி வரையறை, இட ஒதுக்கீடு போன்றவற்றில் குறைபாடுகள் இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் தொடர்பாக திமுக மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை மாநில தலைவர் முடிவெடுத்து அறிவிப்பார். மத்திய அரசு தற்போது போண்டி என்ற நிலையில் உள்ளது. அவர்களிடம் பணம் கிடையாது. அதனால் அவர்களால் ஏழைகளுக்கு எதுவும் செய்ய முடியாது. மத்திய அரசிடம் உள்ள நிதி ஆதாரத்தை கொண்டு விவசாய கடன் தள்ளுபடி செய்யமுடியாது. மாநில அரசுகளிடம் உள்ள நிதியை கொண்டு தான் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மாபெரும் வெற்றியை பெற்ற மத்திய அரசு மக்களுக்கு துரோகம் இழைத்து கொண்டிருக்கிறது என்றார்.Conclusion:
Last Updated : Dec 8, 2019, 1:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.