ETV Bharat / state

'வர்த்தக நிறுவனங்களிடம் குப்பை சேகரிப்பது 1ஆம் தேதி முதல் நிறுத்தம்' - திருச்சி மாநகராட்சி அறிவிப்பு

திருச்சி: வர்த்தக நிறுவனங்களிடம் குப்பை சேகரிப்பது, ஒன்றாம் தேதி முதல் நிறுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.

author img

By

Published : Nov 12, 2019, 7:06 PM IST

Updated : Nov 12, 2019, 8:07 PM IST

byte with Trichy Corporation Commissioner Sivasupramaniyan, வர்த்தக நிறுவனங்களிடம் குப்பை சேகரிப்பது 1ம் தேதி முதல் நிறுத்தம் என மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் பேட்டி

திருச்சியில் உள்ள தனியார் வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்களில் இருந்து குப்பைகள் மாநகராட்சி சார்பில் நேரடியாக சேகரிக்கப்பட மாட்டாது என மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் கூறினார். மேலும் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'திருச்சி மாநகரத்தில் நாள்தோறும் சேரும் குப்பைகளில் 30 விழுக்காடு குப்பைகள் தனியார் வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், மால்கள் உள்ளிட்ட இடங்களில் இருந்து சேரும் குப்பைகள் ஆகும். இவற்றை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களே அகற்றி வருகின்றனர். குப்பை அள்ளும் பணியில் மாநகராட்சி ஊழியர்களில் பெரும்பகுதியினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்' என்றார்.

Trichy Corporation Commissioner Sivasubramaniyan byte, வர்த்தக நிறுவனங்களிடம் குப்பை சேகரிப்பது 1ஆம் தேதி முதல் நிறுத்தம் என மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் பேட்டி

எனவே 'செலவினத்தைக் குறைக்கும் வகையில் வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் தனியார் வளாகங்கள், ஹோட்டல்களில் இருந்து குப்பைகள் சேகரிக்கும் பணியில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபடமாட்டார்கள். அவற்றை அந்தந்த தனியார் நிறுவனங்களே தங்கள் சொந்த செலவில் அப்புறப்படுத்திக் கொள்ள வேண்டும். சிறு கடைகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது' எனக் கூறினார்.

தொடர்ந்து, 'உத்தரவை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த ஆயிரம் ஆயில் பந்துகள்...! - ஆவடி மாநகராட்சி

Intro:வர்த்தக நிறுவனங்களிடம் குப்பை சேகரிப்பது 1ம் தேதி முதல் நிறுத்தம்: மாநகராட்சி அறிவிப்பு Body:குறிப்பு: இதற்கான விஷுவல் அடுத்த பைல் மூலம் அனுப்பி வைக்கப்படும்

திருச்சி:

டிசம்பர் 1ம் தேதி முதல்
திருச்சியில் உள்ள தனியார் வர்த்த நிறுவனங்கள், ஓட்டல்களில் இருந்து குப்பைகள் மாநகராட்சி சார்பில் நேரடியாக சேகரிக்கப்பட்டது மாட்டாது என மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் கூறினார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் செய்தியாளரிடம் பேசுகையில்,
திருச்சி மாநகரத்தில் நாள்தோறும் சேரும் குப்பைகளில் 30 சதவீத குப்பைகள் தனியார் வணிக வளாகங்கள், ஓட்டல்கள், மால்கள் உள்ளிட்ட இடங்களில் இருந்து சேரும் குப்பைகள் ஆகும்.
இவற்றை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களே அகற்றி வருகின்றனர்.

குப்பை அள்ளும் பணியில் மாநகராட்சி ஊழியர்களில் பெரும்பகுதியினர் ஈடுபடுத்தப்படுகின்றனர் .
எனவே செலவினத்தை குறைக்கும் வகையில் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் தனியார் வளாகங்கள், ஓட்டல்களில் இருந்து குப்பைகள் சேகரிக்கும் பணியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஈடுபடமாட்டார்கள்.
அவற்றை அந்தந்த தனியார் நிறுவனங்களே தங்கள் சொந்த செலவில் அப்புறப்படுத்தி கொள்ள வேண்டும்.
சிறு கடைகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

உத்தரவை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட அலகு 3 ம் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
வரும் காலங்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு, டெங்கு கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட மாட்டாது. அதற்கு மாற்றாக பள்ளி கல்லூரிகளுக்கு நேரிடையாக சென்று இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படும். மத குருமார்கள், ஆன்மிகப் பெரியவர்கள்
வாயிலாக குப்பைகள் சேகரிப்பது குறித்து
பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்க திட்டமிட்டுள்ளோம்.
துப்புரவு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு 320 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நேரில் வரலாம் என்றார்.Conclusion:
Last Updated : Nov 12, 2019, 8:07 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.