ETV Bharat / state

"இந்தி என்ற பெயரில் இந்துத்துவா" - ஆ.ராசா குற்றச்சாட்டு - பாஜக

இந்தி என்ற பெயரில் இந்துத்துவத்தை கொண்டு வர பாஜக முயற்சி செய்வதாக திமுக. எம்.பி ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

இந்தியை திணிக்க முயற்சி செய்தால் உதை விழும்

author img

By

Published : Nov 5, 2022, 1:13 PM IST

Updated : Nov 5, 2022, 2:21 PM IST

திருச்சி: மத்திய அரசின் இந்திமொழி திணிப்பை கண்டித்து, புத்தூர் நால்ரோடு பகுதியில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இதில் மாநகரச் செயலாளரும், மேயருமான அன்பழகன் தலைமை வகித்தார். மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி கூறுகையில், ’இந்தி திணிப்பு என்ற பெயரில் இந்துத்துவத்தை கொண்டு வர பாஜக முயற்சி செய்கிறது. தமிழர்களின் பண்பாட்டை நசுக்கவும், ஒழிக்கவும் இதனை செய்கிறது.

உங்களின்(பாஜக) பண்பாடு வேறு, மொழி வேறு. பண்பாடு, கலாச்சாரத்தை அழித்து சமஸ்கிருதத்தை உள்ளே கொண்டு வர பாஜக தீவிரம் காட்டுகிறது. மதம், ஜாதி மனிதனை பிரிக்கும், மொழி சேர்க்கும். 2024ல் கருப்பா, சிவப்பா, காவியா என்று பார்த்து விடுவோம்.

"இந்தி என்ற பெயரில் இந்துத்துவா" - ஆ.ராசா குற்றச்சாட்டு

இந்தி,சமஸ்கிருதத்தை கொண்டு வர விடமாட்டோம். தொடர்ந்து திணிக்க முயற்சி செய்தால் உதை விழும். கருணாநிதி காலத்தில் பாஜகவுடன் கை கோர்த்தது குறைந்தபட்ச செயல் திட்டம் தால் தான். அந்த மூன்று செயல் திட்டங்களையும் கடைப்பிடித்ததால் வாஜ்பாய்வுடன் கொள்கை உடன்பாட்டில் கூட்டணி வைத்தோம்.

பாரதிய ஜனதா திமுகவை பார்த்து பயப்படுகிறது. இப்போது நாடாளுமன்றத்திலும் பயப்படுகிறது. அமித்ஷாவும்,மோடியும் ஒரே மொழி என்று இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் அழிக்க பார்க்கிறார்கள். அப்படி இருந்தால் இந்தியா சீர்குலையும் என பேசினார்.

இதையும் படிங்க: ஆல்ட் நியுஸ் நிறுவனரின் ட்வீட்டுகள் தொடர்பாக தமிழக போலீஸ் புகாரா?- விளக்கம் அளிக்கப்படும் என்கிறார் பிடிஆர்

Last Updated : Nov 5, 2022, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.