ETV Bharat / state

வங்கியில் பணி புரிவோருக்கு அதிகளவில் கோவிட்-19 பாதிப்பு ஏற்படுகிறது! - கோவிட்-19 கண்டறிதல் பரிசோதனை

திருச்சி: வங்கியில் பணிபுரிவோருக்கு கோவிட்-19 பாதிப்பு அதிகளவில் ஏற்படுத்துவதாக அறிய முடிகிறது என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

முகக் கவசம் அணிவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் !

author img

By

Published : Aug 4, 2020, 4:31 PM IST

Updated : Aug 4, 2020, 6:07 PM IST

திருச்சி அரசு மருத்துவமனைக்கு இன்று (ஆக.4) சென்று திடீர் ஆய்வுகளை மேற்கொண்ட அவர் கூடுதல் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக கட்டப்படும், புதிய கட்டடத்திற்கான பணியை நேரில் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், " திருச்சியில் இந்த வாரம் சராசரியாக நாள் ஒன்றுக்கு 150 பேர் கரோனா பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்த எண்ணிக்கையை குறைக்க 10 மடங்கு அளவு கூடுதலாக கண்டறிதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 60 ஆயிரம் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இதனால் கரோனாவின் பரவல் தாக்கம் மெல்ல குறைந்து வருகிறது. சென்னையில் 95 விழுக்காடு பேர் முகக் கவசம் அணிகிறார்கள். பிற மாவட்டங்களிலும், இந்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். திருச்சியைப் பொறுத்தவரை அரசு மருத்துவமனையில் 780, தனியார் மருத்துவமனையில் 542, சுகாதார மையங்களில் 922, கண்காணிப்பு மையத்தில் 2090 என, 4,339 படுக்கைகள் உள்ளன.

தமிழ்நாட்டில் தற்போது 52,000 பேர் கோவிட்-19 சிறப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை தமிழ்நாட்டில் 28 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டு, முன்கூட்டியே கரோனா கண்டறியப்பட்டதால் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 120 பரிசோதனை கூடங்கள் உள்ளன. இதில் 75 விழுக்காடு அரசு மருத்துவமனைகளிலும், 25 விழுக்காடு தனியாரிடம் உள்ளது.

தனியார் பரிசோதனை மையத்தில் தவறான முடிவுகள் வெளியிட்டால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க இந்திய மருத்துவக் கழகம் முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்துள்ளது. எனவே, மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தமிழ்நாட்டில் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு நிதி உதவி வழங்குவது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார். வங்கியில் பணி புரிவோருக்கு அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக செய்திகள் வந்துள்ளன. பணி செய்யும் இடங்களில் வரைமுறை ஏற்படுத்தி கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார். இந்த ஆய்வின்போது அவருடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், சுகாதார இணை இயக்குனர் லட்சுமி, மாநகராட்சி நகர்நல அலுவலர் யாழினி, திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா, ஆர்எம்ஓ ஏகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

Last Updated : Aug 4, 2020, 6:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.