ETV Bharat / state

திருச்சியில் சக மாணவர்கள் தாக்கியதில் 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு - 10th std student died after attacking colleagues

திருச்சி மாவட்டம் பாலசமுத்திரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சக மாணவர்கள் தாக்கியதில் 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ளார்.

திருச்சியில் பொதுத்தேர்வு எழுதவிருந்த 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

author img

By

Published : Mar 10, 2023, 7:17 PM IST

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பால சமுத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மேல் நிலைப்பள்ளியில் தொட்டியம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிக அளவில் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் தொட்டியம் தோளூர்பட்டியைச் சேர்ந்த கோபி என்பவரது மகன் மவுலீஸ்வரனும், 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.

10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

இன்று (மார்ச் 10) வழக்கம்போல் பள்ளி இயங்கிக் கொண்டிருக்கையில், பள்ளி வளாகத்தில் அமர்ந்து மாணவர்கள் படித்துள்ளனர். அப்போது சக மாணவர்கள் சிறு சிறு கற்களைத் தூக்கிப் போட்டு விளையாடியதாகத் தெரிகிறது. இந்த கற்களை மவுலீஸ்வரன்தான் தூக்கி வீசியதாக நினைத்த 3 மாணவர்கள், மவுலீஸ்வரனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் மாணவன் மவுலீஸ்வரன் படுகாயம் அடைந்துள்ளார்.

இதனையடுத்து பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் உதவி உடன், அருகில் உள்ள தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காகக் கொண்டு சென்றுள்ளனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தொட்டியம் அரசு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதன் பேரில், மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு மாணவன் மவுலீஸ்வரன் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பின்னர் அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், மவுலீஸ்வரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனிடையே இது குறித்து தகவல் அறிந்த மவுலீஸ்வரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு, மாணவனின் இறப்புக்கு நியாயம் கேட்டு தொட்டியம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவரின் உறவினர்கள், “மவுலீஸ்வரனுக்கு பள்ளியில் மாணவர்களுடன் சிறிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது 3 மாணவர்கள் சேர்ந்து மவுலீஸ்வரனை தாக்கி உள்ளனர். இந்த தாக்குதலில் மாணவன் உயிரிழந்து விட்டார். எனவே பள்ளி மாணவனை தாக்கிய சக மாணவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அரசு சார்பில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும்” என தெரிவித்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருச்சி - நாமக்கல் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் இது தொடர்பான தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த முசிறி டிஎஸ்பி யாஸ்மின், குற்றம் சாட்டப்பட்ட 3 மாணவர்களை தனியாக அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.‌ அதேநேரம் வேறு ஏதேனும் அசம்பாவிதச் சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க, பள்ளி வளாகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தருமபுரியில் அரசுப்பள்ளி வகுப்பறையை சூறையாடிய மாணவ, மாணவிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.