ETV Bharat / state

தொடர் உண்ணாவிரதப் போராட்டம்: அய்யாக்கண்ணு அறிவிப்பு - தொடர் உண்ணாவிரத போராட்டம்

திருச்சி: ஜனவரி 2ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.

Trichy
Ayyakannu Press meet
author img

By

Published : Dec 29, 2019, 11:51 PM IST

திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாடு விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டதால் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்பின்னரும் விவசாயிகளை முதலமைச்சர் கண்டுகொள்ளவில்லை. நீர் மேலாண்மைத் திட்டத்தில் வளமாக இருக்கும் மாநிலத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் குறைவாக உள்ளது. அதனால் இங்கும் நீர் மேலாண்மைத் திட்டத்தை சேர்க்க வேண்டும்.

மரபணு மாற்றப்பட்ட விதைகளால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பக் கட்டுப்பாடு குறித்து பேசிய அரசு, தற்போது அது குறித்து பேசமறுப்பதற்கு காரணமே மரபணு மாற்றப்பட்ட விதைகள்தான். வெங்காயத்திற்கு உரிய விலை வேண்டும், அரசு வெங்காயத்தை கொள்முதல் செய்ய வேண்டும். கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

  • அய்யாக்கண்ணு செய்தியாளர் சந்திப்பு.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்தச் சென்றோம். அங்கிருந்து திருச்சியில் போராட்டம் நடத்தக்கூறி அனுப்பிவைத்தார்கள். திருச்சியில் ஜனவரி 2ஆம் தேதிமுதல் 10ஆம் தேதிவரை தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதி கோரி காவல் துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லை என்றால் சென்னைக்குச் சென்று மீண்டும் போராட்டம் நடத்தப்படும்" என்றார்.

இதையும் படிக்க: சாலையை மூடிய பனி: லாரி கவிழ்ந்து விபத்து!

Intro:திருச்சியில் ஜனவரி 2ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அய்யாக்கண்ணு கூறினார்.Body:திருச்சி:
திருச்சியில் ஜனவரி 2ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அய்யாக்கண்ணு கூறினார்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், உச்சநீதிமன்றமே தமிழக விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டதால் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு அறிவுரை கூறியுள்ளது. அதன் பின்னரும் விவசாயிகளை முதலமைச்சர் கண்டுகொள்ளவில்லை. நீர் மேலாண்மை திட்டத்தில் வளமாக இருக்கும் மாநிலத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நிலத்தடி நீர் குறைவாக உள்ளது. அதனால் இங்கும் நீர் மேலாண்மை திட்டத்தை சேர்க்க வேண்டும். மரபணு மாற்றப்பட்ட விதைகளால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப கட்டுப்பாடு குறித்து பேசிய அரசு தற்போது அதுகுறித்து பேச மறுப்பதற்கு காரணமே மரபணு மாற்றப்பட்ட விதைகள் தான். வெங்காயத்திற்கு உரிய விலை வேண்டும். அரசு வெங்காயத்தை கொள்முதல் செய்ய வேண்டும். கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் .
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்த சென்றோம். அங்கிருந்து திருச்சியில் போராட்டம் நடத்த கூறி அனுப்பி வைத்தார்கள். திருச்சியில் ஜனவரி 2ம் தேதி முதல் 10ம் தேதி வரை தொடர உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அனுமதி கோரி காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லை என்றால் சென்னைக்குச் சென்று மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.