தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஆட்சிமொழி சட்ட வாரம் கடைப்பிடிக்க அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி திருச்சி மாவட்டத்தில் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் வரும் 26ஆம் தேதி வரை, ஆட்சி மொழி சட்ட வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சியில் உள்ள வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பன்னாட்டு வணிக நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழ் மொழியில் பெயர்ப் பலகை அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
திருச்சி காந்தி சந்தை, காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மெயின்கார்டு கேட், தெப்பக்குளம் காந்தி சிலை வரை நடைபெற்ற இப்பேரணியில் 50க்கும் மேற்பட்ட பள்ளி, மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர். இப்பேரணியில் தமிழ் அறிஞர்கள், தமிழ் அமைப்பாளர்கள், தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பயணிகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நாடகம்