ETV Bharat / state

ஆட்டோ மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு - 5 பேர் படுகாயம் - accident

திருச்சி: மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் ஆட்டோ மீது தனியார் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் மூதாட்டி மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

accident
author img

By

Published : Sep 1, 2019, 11:32 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள செவலூர் பகுதியைச் சேர்ந்த கண்ணம்மாள், முனியம்மாள், தமிழரசன், சத்தியபாரதி உள்ளிட்டோர் திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பயணிகள் ஆட்டோவில் புறப்பட்டு சென்றனர். நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையில், அவர்கள் சென்ற ஆட்டோ திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செவலூர் பிரிவில் சாலையை கடக்க முற்பட்டது.

அப்போது, சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்றுக்கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து எதிர்பாராத விதமாக பயணிகள் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் செவலூரைச் சேர்ந்த மூதாட்டி கண்ணம்மாள் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். விபத்தில் சிக்கி ஆட்டோ ஓட்டுநர் உள்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்த மக்கள் மீட்டு திருச்சி பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இரண்டு பேர் காயங்களுடன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மணப்பாறை அருகே பயங்கர விபத்து

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Intro:மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் ஆட்டோ மீது தனியார் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் மூதாட்டி பலி - 5 பேர் படுகாயம்.Body:திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த செவலூர் பகுதியை சேர்ந்த கண்ணம்மாள், முனியம்மாள், தமிழரசன், சத்தியபாரதி உள்ளிட்டோர் திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பயணிகள் ஆட்டோ ஒன்றில் புறப்பட்டு சென்றுள்ளனர்.நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் வழியில் பயணிகள் ஆட்டோ
திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செவலூர் பிரிவில் சாலையை கடக்க முற்பட்ட போது சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்றுக்கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து எதிர்பாராத விதமாக பயணிகள் ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த செவலூரை சேர்ந்த மூதாட்டி கண்ணம்மாள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் சிக்கி ஆட்டோ ஓட்டுனர் உள்பட மூன்று பேர் படுகாயமும், இருவர் காயங்களுடனும் காவல்துறையினரால் மீட்கப்பட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு முதலுதவிக்கு பின் படுகாயமடைந்த மூன்று பேர் திருச்சி பொது மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டும், இரண்டு பேர் காயங்களுடன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.