திருச்சி: திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தினசரி துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக விமானத்தில் வரும் பயணிகள் பல்வேறு கோணங்களில் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை சட்ட விரோதமாக கடத்தி வருவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
நேற்று திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு, மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ ஏர் விமானம் வந்தது. அந்த விமானத்தில் பயணி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்து உள்ளது. அவர்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து உள்ளனர்.
இந்த சோதனையில் ஆண் பயணி ஒருவர் தனது பேண்ட் பாக்கெட்டில் 29 இலட்சத்து 43 ஆயிரத்து ஐநூற்று எண்பத்து நான்கு ரூபாய் மதிப்பு உள்ள 476 கிராம் அதாவது 59.5 சவரன் தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டது. பின், கண்டறிந்த தங்க நகைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் செல்போன்கள், வாட்ச் உள்ளிட்டப் பொருட்களில் தங்க நகைத் தகடுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பின் அதனையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இன்று வந்த ஏர் ஏசியா விமானம் திருச்சிக்கு வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்து உள்ளனர். அப்போது, ஆண் பயணி ஒருவர் மீன் சாஸ் டின் டப்பாவில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 20.32 லட்சம் மதிப்பிலான 330 கிராம் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. பின் அந்த நகைகளை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பத்தைத் தொடர்ந்து, அதிகாரிகள் இந்த இரண்டு ஆண் பயணிகளும் இதற்கு முன்பு தங்கம் கடத்தலில் ஈடுபட்டுள்ளனரா? இவர்களின் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா?. வேறு வழக்குகள் ஏதும் இவர்கள் மீது உள்ளதா? இவர்களுக்கு பின்புலமாக யாரும் செயல்படுகிறார்களா? எனப் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனை அடுத்து விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள், அந்த இரு பயணிகளையும் விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தீ வைத்த சம்பவம்:“தவறு செய்தவர்களுக்கு கடும் தண்டனை”... அமைச்சர் சி.வி.கணேசன்