ETV Bharat / state

விழாக்களில் மட்டுமே பங்கேற்கும் அதிமுக அமைச்சர்கள் - கே.என். நேரு விமர்சனம்

author img

By

Published : Jan 5, 2021, 7:16 PM IST

Updated : Jan 5, 2021, 7:40 PM IST

திருச்சியைச் சேர்ந்த இரண்டு அதிமுக அமைச்சர்களும் விழாக்களிலும், நிகழ்ச்சிகளிலும் மட்டுமே பங்கேற்கிறார்கள் என்று கே.என். நேரு விமர்சித்துள்ளார்.

திமுக முதன்மைச் செயலாளர் நேரு
திமுக முதன்மைச் செயலாளர் நேரு

திருச்சி: உறையூர் கைத்தறி நெசவாளர் திருமண மண்டபம், புத்தூர் சண்முகா திருமண மண்டபம் ஆகிய இடங்களில் 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற பெயரில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு தலைமை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக முதன்மைச் செயலாளர் நேரு, "திருச்சியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா, பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எந்தவித திட்டங்களும் திருச்சிக்கு கொண்டுவரப்படவில்லை.

திமுக முதன்மைச் செயலாளர் நேரு
திமுக முதன்மைச் செயலாளர் நேரு

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் விழாக்கள், நிகழ்ச்சிகளில் மட்டுமே திருச்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் கலந்துகொள்கிறார்கள். திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால், எந்தவிதச் சாதனைகளையும் கூறி வாக்கு கேட்க முடியவில்லை.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 3000 பேர் பணியாற்றுகிறார்கள். அதேபோல் அஞ்சலகங்கள், வங்கிகள் என வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பணியாற்றுகிறார்கள்.

விழாக்களில் மட்டுமே பங்கேற்கும் அதிமுக அமைச்சர்கள் - கே.என். நேரு விமர்சனம்

தமிழர்களுக்கு இங்கு இடம் இல்லை. அதேபோல் புதிய கல்விக்கொள்கை, வேளாண் சட்டங்கள், நீட் தேர்வு போன்றவற்றை அச்சம் காரணமாக அதிமுக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. தாங்கள் கொள்ளையடித்த பணத்தை பாதுகாப்பதற்காக மத்திய அரசின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் தமிழ்நாடு அரசு ஆதரவுடன் செயல்படுகிறது" என்றார்.

முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் பேசிய திருச்சி மாநகராட்சி 52, 52ஏ ஆகிய வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களது வார்டுகளில் கழிப்பிடம், மழைநீர் வடிகால், சாக்கடை, பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Last Updated : Jan 5, 2021, 7:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.