'பசங்க', 'களவாணி', 'வாகை சூடவா' உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் விமல். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சொந்த ஊரில் தனது சொந்த செலவில் கிருமி நாசினி தெளித்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால் வருவாய் இன்றி தவித்து வரும் தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டு துறையில் பதிவு செய்யாத நாடகக் கலைஞர்களுக்கு நடிகர் விமல் அரிசி, கோதுமை மாவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
இதில் மணப்பாறை, வளநாடு கைகாட்டி, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகக் கலைஞர்கள் நிவாரணப் பொருட்களைப் பெற்றுச் சென்றனர்.
இதையும் படிங்க...கரோனா வைரஸ்: சொந்த கிராமத்தில் கிருமிநாசினி தெளித்த விமல்!