திருச்சி: துறையூர் - தம்மம்பட்டி சாலையில் 30 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று பிற்பகல் 3 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. துறையூர் அடுத்த முருங்கபட்டி அருகே செட்டிக்காடு என்ற பகுதியில் சென்றபோது பேருந்தில் திடீரென தீப்பற்றி எறியத் தொடங்கியது.
இதனை அறிந்த ஒட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். அவரது எச்சரிக்கையை தொடர்ந்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்தபடி வெளியேறினர். பேருந்து முழுவதும் மளமளவென பரவிய தீ கொளுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்த உப்பிலியபுரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், டீசல் டேங்க் கிளாம்பு கட் ஆகி கீழே விழுந்ததால் பேருந்து தீ பிடித்து எரிந்தது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதையும் படிங்க:TNEB Aadhaar link: மின் இணைப்புடன் ஆதார் இணைக்க ஜன.31 வரை அவகாசம்!