ETV Bharat / state

உச்சகட்ட போதையில் ஒருவரைத் தாக்கிய பாஜக வழக்கறிஞர் - ஆட்சியர் அலுவலகம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் பாஜக வழக்கறிஞர் மற்றும் செயற்குழு உறுப்பினர் 2 பேர் நேற்று இரவு உச்சகட்ட போதையில் ஒருவரை ஒருவர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 25, 2022, 6:14 PM IST

உச்சகட்ட போதையில் ஒருவரைத் தாக்கிய பாஜக வழக்கறிஞர்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள டீக்கடையில் நேற்றிரவு (டிச.24) பாஜக வழக்கறிஞர் சரவணன் மற்றும் சிறுபான்மை அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாமுவேல் லவ் ஜாய் ஆகிய இருவரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பானது. இதில் பாஜகவைச் சேர்ந்த இருவரும் மற்றொரு நபரை தாக்கினர். பதிலுக்கு அந்த நபரும் இருவரையும் தாக்கினார்.

பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிய அந்த நபர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் அருகே ஓடியபோது பின்னால் துரத்தி வந்த பாஜகவினர் அந்த நபரை சரமாரியாக தாக்கினர். அங்கிருந்து தப்பி ஓடி வந்த நபர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே நுழைந்தார்.

இதில் பாஜக சிறுபான்மை அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாமுவேல் லவ்ஜாய் காயமடைந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் உடனடியாக அவசர ஊர்தி மூலம் இருவரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த கன்டோன்மென்ட் காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமார் மற்றும் அமர்வு நீதிமன்ற காவல் ஆய்வாளர் சேரன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் பாஜகவைச் சேர்ந்த இரண்டு பேரும் உச்சகட்ட போதையில் இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு இந்த மோதலுக்கான காரணம் மற்றும் தாக்குதலுக்கு உள்ளான அந்த நபர் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. உச்சகட்ட போதையில் ஒரு நபரை தாக்கியதாக பாஜகவைச் சேர்ந்த இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: CCTV: பைக் ஹெல்மெட்டை லாவகமாகத் திருடும் ஆசாமியின் சிசிடிவி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.