திருச்சி: நாடு முழுவதும் இன்று (செப்.10) விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தமிழ்நாடு அரசு தடைவிதித்துள்ளது. ஆங்காங்கே உள்ள விநாயகர் கோயில்களில் கொழுக்கட்டை படையல் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது.
அந்த வகையில் திருச்சியில் உள்ள புகழ்பெற்ற மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி ஆலயத்தில் உள்ள உச்சிப்பிள்ளையாருக்கும், மாணிக்க விநாயாகருக்கும் 60 கிலோ எடை கொண்ட ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டு படைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து உச்சி பிள்ளையாருக்குச் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கொழுக்கட்டை பிரசாதமாக விநியோகம் செய்யப்பட்டது.
முன்னதாக மேளதாளங்கள் முழங்க மலை வாசலிலிருந்து கொழுக்கட்டை கோயிலுக்குள்ளே கொண்டுவரப்பட்டது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொள்ள பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: மகிழ்ச்சியும், மன நிம்மதியும் தவழட்டும் - ஓபிஎஸ், இபிஎஸ் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து