ETV Bharat / state

ஜவுளி வியாபாரி கடத்தல்; துப்பாக்கிகளுடன் 6 பேர் கைது - திருச்சியில் நடந்தது என்ன?

author img

By

Published : Jun 28, 2023, 10:54 PM IST

திருச்சியில் கடனாக வாங்கிய பணத்தை திரும்பத் தராததால் ஜவுளி வியாபாரியை கூலிப்படையை வைத்து கடத்திய வழக்கில், 6 பேரை துப்பாக்கிகளுடன் போலீசார் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

திருச்சி: திருச்சி அருகே ஜவுளி வியாபாரி பணத்தைக் கடன் வாங்கி விட்டு, திரும்ப தராததால் (Trichy kidnapping case) கூலிப்படையை வைத்து கடத்திய வழக்கில், 6 பேரை துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மணிகண்டம் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அருகே உள்ள நாகமங்கலத்தைச் சேர்ந்தவர், ராமராஜன்(34). இவர் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று‌ ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், இவரது மனைவி ஹேமலதா(25), தனது கணவர் ராமராஜன் கடந்த 24ஆம் தேதி காலை உறவினர் ஒருவரைப் பார்த்துவிட்டு வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை எனவும், பல இடங்களில் அவரைத் தேடியும் கிடைக்கவில்லை எனவும் கூறி கடந்த ஜூன் 26ஆம் தேதி மணிகண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் மணிகண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தபோது, ராமராஜன் சென்னை ஆவடி ரங்கநாதன் நகரைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் கீர்த்தி(38) என்பவரிடம் தொழில் செய்வதற்காக ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கடன் பெற்று இருந்ததும்; இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதன் அடிப்படையில் மணிகண்டம் போலீசார் கீர்த்தியைப் பிடித்து விசாரித்த போது, ராமராஜனிடம் தான் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டதாகவும்; ஆனால், ராமராஜன் தனக்கு வியாபாரம் இல்லை; தொழிலில் நஷ்டம் எனக் கூறி வாங்கிய கடனைத் திரும்ப செலுத்தாமல் இழுத்து அடித்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கீர்த்தி எப்படியாவது ராமராஜன் இடமிருந்து தான் கொடுத்த பணத்தை திரும்பப் பெற்று தீர வேண்டும் என முடிவு செய்து, அவரது நண்பரான செங்கல்பட்டு கடப்பாக்கம் முதல் தெருவைச் சேர்ந்த அப்துல் கனி மகன் முஸ்தபா (எ) சலீம்(28) என்பவரிடம் கூறியுள்ளார். அவரும் எனக்கும் பணம் தேவை உள்ளது; அதனால், ராமராஜன் இடமிருந்து தான் பணத்தைப் பெற்று தருவதாக கூறியதாகவும், அதற்கு நமக்கு ஒரு துப்பாக்கி வேண்டும் என முஸ்தபா கூறியதாகவும்; அதன் அடிப்படையில் முஸ்தபாவுடன் ஜார்க்கண்ட் மாநிலம் சென்று அங்கு கள்ள துப்பாக்கி வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் முஸ்தபாவின் நண்பர்களான சென்னை சூளைமேடு ஆதிரைபுரத்தைச் சேர்ந்த கோபால் மகன் ராஜேஷ்(41), தஞ்சாவூர் ராஜப்பா நகர் செங்காளம்மன் நாச்சியம்மன் தெருவைச் சேர்ந்த சிவசங்கர் மகன் மணிகண்டன்(34), அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமார் மகன் வசந்த்(24), சென்னை வியாசர்பாடி கல்யாணபுரம் முதல் தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் இருதயராஜ்(43) ஆகிய 5 பேர் மற்றும் கீர்த்தி என ஆறு பேரும் சேர்ந்து ராமராஜனை கடத்திச் சென்று கொடுத்த பணத்தை வசூலிப்பது என முடிவு எடுத்து, ராமராஜனை கடந்த 24ஆம் தேதி காரில் கடத்திச்சென்று பணம் கேட்டு, அடைத்து வைத்து மிரட்டி வருவதாகக் கூறியுள்ளார்.

இவற்றின் அடிப்படையில் மணிகண்டம் போலீசார், முஸ்தபா உள்ளிட்ட ஆறு பேரையும் கைது செய்ததோடு ராமராஜனையும் மீட்டதோடு, மேலும் முஸ்தபாவிடமிருந்து துப்பாக்கி ஒன்றையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், 6 பேரிடம் தொடர்ந்து மணிகண்டம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: சிதம்பர சர்ச்சைக்கு காரணம் என்ன? கனகசபை தரிசனம் பிரச்னை ஆனது ஏன்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.