ETV Bharat / state

கங்கைகொண்ட சோழபுரத்தில் சீன பானை ஓடு கண்டெடுப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் - மாளிகை மேடு

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் மாளிகை மேடு பகுதியில் நடைபெற்று வரும் 3ஆம் கட்ட அகழாய்வு பணியில் சீன பானை ஓடு உள்ளிட்ட 3 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கங்கைகொண்ட சோழபுரத்தில் சீன பானை ஓடு கண்டெடுப்பு

author img

By

Published : Jun 29, 2023, 1:19 PM IST

திருச்சி: கங்கைகொண்ட சோழபுரம் மாளிகை மேடு பகுதியில் நடைபெற்று வரும் 3ஆம் கட்ட அகழாய்வுப் பணியில் சீன பானை ஓடு உள்ளிட்ட 3 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் கங்கைகொண்ட சோழபுரம் உள்ளது. சோழ மாமன்னன் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில், கங்கை வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் அடையாளமாக கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோயில் கட்டினார்.

உலகப் பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலின் அருகே மாளிகை மேடு உள்ளது. இந்த பகுதியில்தான் அரண்மனை கட்டப்பட்டதாக வரலாற்றுச் சுவடுகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இந்த மாளிகை மேட்டில் 2 கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. அப்போது ராஜேந்திர சோழன் கால அரண்மனையின் சுவர்கள் மற்றும் சீன வளையல்கள், இரும்பு ஆணிகள் உள்பட 461 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

அவற்றை மாளிகை மேட்டில் உள்ள அருங்காட்சியத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைத்து உள்ளனர். மாளிகை மேட்டில் தற்போது 3ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கிய 3ஆம் கட்ட அகழாய்வுப் பணியில் 16 குழிகள் தோண்டப்பட்டு, 21 பணியாளர்களைக் கொண்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த மே மாதம் இந்தப் பகுதியில் செங்கற்களால் ஆன வாய்க்கால் போன்ற அமைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது சீன பானை ஓடுகள், காசு வார்ப்பு, சுடு மண்ணால் அலங்கரிக்கப்பட்ட அச்சு முத்திரை ஆகிய 3 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இவை 11ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிற்கும், சீன நாட்டுக்கும் இடையிலான வணிகத் தொடர்பை உறுதி செய்யும் வகையில் இருப்பதாக தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும், கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால பொருட்களைத் தொல்லியல் துறையினர் மீட்டு, அவற்றை மாளிகை மேட்டில் உள்ள அருங்காட்சியத்தில் வைத்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

மேலும், இது போன்ற பழங்கால பொருட்களும், அரிய பொக்கிஷங்களும் அடுத்தடுத்த கட்ட அகழாய்வில் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும், இது குறித்து நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், “அலைகடல் நடுவில் கலம் பல செலுத்திப் பூர்வ தேசமும், கங்கையும், கடாரமும் கொண்ட, தமிழ் நாட்டின் பெருமைக்குரிய பெருவேந்தன் ராஜேந்திர சோழனின் அரண்மனை அமைந்திருந்த கங்கை கொண்ட சோழபுரம், மாளிகை மேடு பகுதியில் தமிழ்நாடு அரசின் தொல்பொருள் துறை தொடர்ந்து அகழ்வாய்வினை மேற்கொண்டு வருகின்றது.

இதுவரை சோழர் கால அரண்மனையின் பல அடித்தளப் பகுதிகள் வெளிக்கொணரப்பட்டு, அக்காலகட்டத்தைச் சார்ந்த பல்வேறு அரும்பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சீன நாட்டைச் சார்ந்த உடைந்த பீங்கான் துண்டு ஒன்றும், காசுகளை உருவாக்கப் பயன்படும் அச்சு மற்றும் சுடுமண்ணால் ஆன முத்திரை ஆகியனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பொது யுகத்திற்குப் பின்னர் பதினொன்றாம் நூற்றாண்டில், தமிழ் நாட்டினுடனான சீன வணிகத் தொடர்புகளுக்கும், அன்றைய செலாவணியில் இருந்த பலவகையான காசுகளை உருவாக்கும் அக்க சாலைகள் அமையப்பெற்றிருந்தமைக்கும், அரசின் நடைமுறைகளில் பின்பற்றப்பட்ட அரச முத்திரைகள் குறித்தும் தெரிவிக்கும் தரவுகளாக இவை அமைந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கதாகும்” என குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: Madurai Metro: வைகை ஆற்றின் அடியில் மெட்ரோ ரயில் பாதை - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.