இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”என்.ஐ.டி., 15ஆவது பட்டமளிப்பு விழா வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் 1,721 மாணவ - மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளன. தேசிய தொழில்நுட்ப கழகங்களுக்கு மத்தியில் முதலிடத்திலும், இந்திய பொறியியல் கல்லூரிகள் பட்டியலில் 10ஆவது இடத்திலும், ஆர்க்கிடெக்சர் பிரிவில் 7ஆவது இடத்திலும், மேலாண்மை துறை பட்டியலில் 17ஆவது இடத்திலும் திருச்சி என்.ஐ.டி உள்ளது.
பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 270 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன” என்றார்.