ETV Bharat / state

மூவேந்தர் முதல் அமெரிக்கா வரையிலான பழங்கால நாணயக் கண்காட்சி!

author img

By

Published : Feb 28, 2020, 6:10 PM IST

திருச்சி: தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற நாணயக் கண்காட்சியில் பழங்காலத் தமிழ் நாணயம் முதல் 200 வெளிநாடுகளைச் சேர்ந்த நாணயங்கள் இடம்பெற்றிருந்ததை மாணவர்கள் குதூகலத்துடன் பார்வையிட்டனர்.

200-countries-coins-have-displayed-in-trichy-coin-exhibition
மூவேந்தர் முதல் அமெரிக்கா வரையிலான பழங்கால நாணயக் கண்காட்சி!

திருச்சியில் திருச்சி ஜெகன்மாதா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் உலக நாணயம், பணத்தாள் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியினை பள்ளி தாளாளர் சகாயராஜ் தொடங்கிவைத்தார். இக்கண்காட்சியில் பழங்காலம் முதல் தற்காலம் வரையிலான பணத்தாள்கள், காசோலை, வரைவோலை, கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, பண வடிவ மற்ற பிட்காய்ன்கள் எனப் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.

சங்க காலத்தில் மன்னா்களான சேர, சோழ, பாண்டியர் தங்கள் சின்னங்களான வில், மீன், புலி முத்திரைகள் அடங்கிய நாணயங்கள், சங்க காலத்திற்கு பின் தமிழ் எழுத்துகளுடன் பல்லவர் காலத்து நாணயங்களும் இடம்பெற்றிருந்தன.

அமொிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 200 வெளிநாடுகளின் பணத்தாள்கள், நாணயங்கள், அஞ்சல் தலைகளும் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இக்கண்காட்சியினை ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவா்களுடன் பொதுமக்களும் கண்டு ரசித்தனர். திருச்சி நாணயவியல் சேகரிப்போர் சங்கத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோா் இந்த நாணயக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் கண்டுபிடிப்பு கண்காட்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.