திருச்சி, பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை மாணிக்க விநாயகர், உச்சிப்பிள்ளையர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை 5 மணியிலிருந்தே உச்சிப்பிள்ளையருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், உச்சிப்பிள்ளையாருக்கு தலா 75 கிலோ வீதம் 150 கிலோ எடையுள்ள இரண்டு கொழுக்கட்டைகள் தயார் செய்யப்பட்டு, சிவாச்சார்யர்களின் மேளதாளங்கள் முழங்க, தொட்டிலில் வைத்து கொண்டு வரப்பட்டு விநாயகருக்கு படைக்கப்பட்டது.
பின்னர் அந்த கொழுக்கட்டைகள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் மாவட்டத்தின் பிற விநாயகர் கோயில்களிலும் விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்று வருகின்றன.