ETV Bharat / state

திருச்சியில் மேலும் 136 பேருக்கு கரோனா தொற்று உறுதி! - திருச்சி கரோனா பாதிப்பு

திருச்சி: மாவட்டத்தில் மேலும் 136 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்து 282ஆக உயர்ந்துள்ளது.

திருச்சி கரோனா பாதிப்பு
திருச்சி கரோனா பாதிப்பு
author img

By

Published : Aug 2, 2020, 4:29 AM IST

தமிழ்நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 1) ஒரே நாளில் 5 ஆயிரத்து 579 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 51 ஆயிரத்து 738ஆக அதிகரித்துள்ளது. 99 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், 7 ஆயிரத்து 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 136 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 282ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று வரை 1,551 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 116 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 651ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 60ஆக நீடிக்கிறது. தற்போது 1,571 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.