பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில், கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக தற்போது சொந்த ஊரிலேயே விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்திருந்தார்.
இந்நிலையில், நேற்று (செப்.21) காலை பூலாம்பாடியிலிருந்து வேப்படி பாலக்காடு பகுதிக்குச் சென்றுவிட்டு மீண்டும் பூலாம்பாடி கிராமத்திற்குச் சென்று கொண்டு இருந்தபோது, அப்பகுதியில் உள்ள பாலத்தின் பக்கவாட்டு சுவரில் பாலச்சந்தரனின் இருசக்கர வாகனம் மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பிறகு இதுகுறித்து சம்பவ இடத்திற்குச் சென்ற அரும்பாவூர் காவல் துறையினர், பாலச்சந்தர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.