கன்னியாகுமரி கொல்லங்கோடு அருகேயுள்ள மஞ்ச தோம்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் (44). இவருக்கு திருமண வயதில் ஒரு மகன் மக்கும் ஒரு மகள் உள்ளனர்.
ஜார்ஜ், சவுதி அரேபியாவில் கடந்த 6 வருடங்களாக, கிராத்தூர் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவரின் கீழ் கட்டட வேலை செய்து வந்தார். கிறிஸ்டோபர், ஜார்ஜுக்கு சம்பள பணத்தை சரியாக வழங்காமல் இருந்து வந்துள்ளார். ஜார்ஜ் விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது கூட சம்பளத்தை பிடித்து வைத்துக்கொண்டுதான் அனுப்பி வைத்துள்ளார். இதுவரையில் கிறிஸ்டோபர் ஜார்ஜுக்கு ரூ. 6 லட்சத்துக்கும் மேல் பணம் தர வேண்டியதுள்ளதாக கூறப்படுகிறது.
கிரிஸ்டோபர் பணம் தந்ததும் ஊருக்கு சென்று தன் மகளின் திருமணத்தை நடத்த ஜார்ஜ் திட்டமிட்டு இருந்ததாக அறியமுடிகிறது.
இந்த நிலையல் கடந்த 16ஆம் தேதி ஜார்ஜின் அறைக்கு வந்த கிறிஸ்டோபரிடம் தன் சம்பள பாக்கியை கேட்டுள்ளார். அதுவரையில் வீட்டிற்கு தொலைபேசியில் பேசி வந்த ஜார்ஜ், அதன் பின்னர் பேசவே இல்லை. அவருக்கு அழைத்தாலும் ஏற்காமல் இருந்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி ஜார்ஜின் மனைவியைத் தொடர்பு கொண்ட கிறிஸ்டோபர், ஜார்ஜுக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்பின்னர் ஜார்ஜுக்கு பல முறை தொடர்பு கொண்டும் அழைப்பில் கிடைக்காமல் இருந்துள்ளார்.
இதனிடையில், அவர் அறைக்கு பக்கத்தில் தங்கியிருக்கும் அவரது ஊரைச் சேர்ந்தவர்கள் ஜார்ஜ் கொல்லப்பட்டதாக விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அவர்கள் ஜார்ஜின் வீட்டுற்கு துக்கம் விசாரிக்க சென்ற போதுதான், அவரது குடும்பத்தினருக்கு அவர் இறந்த விபரம் தெரிந்துள்ளது. இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வேலைக்கு சென்ற இடத்தில் அடித்துக் கொல்லப்பட்ட தன் கணவரின் உடலை மீட்டுத் தரக்கோரியும், அவரின் மரணத்திற்கு காரணமாக இருந்த கட்டட காண்டிராக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஜார்ஜின் மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார் .