திருவாரூர் மாவட்டம் குடவாசலில் புதிய ஊராட்சி ஒன்றிய கட்டடம் மூன்று கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் கட்டடம் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது.
அப்பணிகளை தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் இன்று நேரில் சென்று ஆய்வுசெய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையைத்தான் நாங்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
அதற்காக அஇஅதிமுக அரசு நிறைவேற்றிய தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏழு பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான் அஇஅதிமுகவின் இறுதியான உறுதியான நிலைப்பாடு.
பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை என்பது தேமுதிக கட்சியின் நிலைப்பாடு. அது குறித்து கருத்து சொல்ல ஒன்றுமில்லை.
வருகின்ற 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சராக வர வேண்டும் என்பது மக்களுடைய விருப்பம்" எனக் கூறினார்.