ETV Bharat / state

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றுங்கள்! - Village Council Meeting

கிராம சபைக் கூட்டத்தில் மத்திய அரசின் இ.ஐ.ஏ. 2020 வரைவு, புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றி மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டுமென தன்னாட்சி இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

கிராமசபை கூட்டம் : புதிய வேளாண் சட்டங்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றுங்கள் - தன்னாட்சி இயக்கம்

author img

By

Published : Sep 30, 2020, 6:50 PM IST

Updated : Sep 30, 2020, 6:55 PM IST

சென்னை: கிராம சபைக் கூட்டத்தில் மத்திய அரசின் இ.ஐ.ஏ. 2020 வரைவு, புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டுமென தன்னாட்சி இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, அவ்வியக்கத்தின் பொதுச்செயலாளர் எஸ். நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 2ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும் கிராம சபைகள் கூட்டப்படவிருக்கின்றன.

எட்டு மாதங்களுக்குப் பிறகு நடைபெறவுள்ள இந்த கிராமசபை கூட்டத்தில் கிராம மக்கள் அனைவரும் பங்கேற்று விவாதிக்க வேண்டிய பல முக்கிய விஷயங்கள் உள்ளன.

எனவே, அதற்காக முறையாகக் கிராமசபைக் கூட்டங்களை வழிநடத்த முக்கிய விஷயங்களை விவாதிக்க மக்களை நாம் தயார்படுத்த வேண்டிய கடமை நம் முன்னே நிற்கிறது. கரோனா ஊரடங்கு காரணமாக, மே 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்தர தினம் ஆகிய இரு தினங்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவில்லை.

இந்த இடைப்பட்ட காலத்தில் நம் கிராம அளவிலும், கிராமங்களை நேரடியாகப் பாதிக்கும் பல விஷயங்கள் மாநில அளவிலும், அகில இந்திய அளவிலும் நடந்துள்ளன. அவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டியது அவசியம்.

1. ஊரடங்கு காலத்தில் மக்கள் எதிர்கொண்ட சவால்கள் - உணவு, வேலைவாய்ப்பு போன்றவை பற்றி விவாதிக்கலாம்.

அதனை ஊராட்சி எதிர்கொண்டவிதம், அதன் செயல்பாட்டை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும்.

2. 15ஆவது மத்திய நிதிக்குழு நிதியோ, 5ஆவது மாநில நிதிக்குழு நிதியோ இதுவரை ஊராட்சிகளுக்குக் கிடைக்காமல் உள்ளது. கடந்த ஏப்ரல் 2020 முதல் மாநில நிதிக்குழு நிதி கிடைக்காமல் ஊராட்சிகளில் அடிப்படை பராமரிப்புப் பணிகளோ, ஊழியர்களுக்கான ஊதியமோ கூட வழங்க முடியாத நிலை உள்ளது.

இது குறித்து ஊராட்சித் தலைவர், பிரதிநிதிகளிடம் கலந்தாலோசியுங்கள். கிராம சபையில் விவாதித்து இந்நிதிகளை மாநில அரசு உடனடியாக விடுவிக்கக் கோர வேண்டும்.

3. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் (நூறு நாள் வேலை), பணியாளர்கள் முழு ஊதியம் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கலாம். இடத் தேர்வு, அளவீடுகள், பணிகளை முறைப்படுத்துவது, பணியாளர்களுக்கான முழு ஊதியம் குறித்து விவாதிக்க வேண்டும்.

4. ஊராட்சிகளின் ஒப்பந்தப் பணிகளை மாவட்ட நிர்வாகம் தன்னிச்சையாக மேற்கொள்ள நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை உத்தரவை கருத்தில்கொண்டு கிராம சபையில் தத்தமது ஊராட்சிகளுக்குத் தேவையானவற்றை விவாதிக்க வேண்டும்.

5. இதுவரை தேர்தல் நடத்தப்படாமல் உள்ள 2,900 கிராம ஊராட்சிகளில் தனி அலுவலர் மூலமாகத்தான் நிர்வாகம் நடந்துவருகிறது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் மேற்குறிப்பிட்ட ஊராட்சியின் நிதி, ஊராட்சியின் உரிமைகள் குறித்து கட்டாயம் விவாதித்து, அங்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டுமென தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

6. கிராம மக்களின் வாழ்வில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் மத்திய அரசின் இ.ஐ.ஏ. 2020 வரைவு, புதிய வேளாண் சட்டங்கள், பி.டி. கத்தரி கள பரிசோதனைக்கான அனுமதி போன்ற முக்கிய விஷயங்களில் மக்களின் நிலைப்பாட்டை மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்குக் கொண்டு செல்ல தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

ஒவ்வொரு கிராமமும் ஒரு குட்டிக் குடியரசாகச் செயல்பட வேண்டும் என்ற அண்ணல் காந்தியடிகளின் கனவை, அவருடைய பிறந்தநாளான வரும் அக்டோபர் 2ஆம் தேதியில் நினைவுகூருவோம்.

சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் நடக்கும் விஷயங்கள் மட்டுமே கிராம மக்களின் தலையெழுத்தைத் தீர்மானிப்பதாக இருந்துவிடக் கூடாது. கிராம சபையின் கருத்திற்கும் மதிப்பளிக்கும் நிலை இந்தியாவில் வர வேண்டும். அதற்குக் கிராம சபைகளை, நாம் ஜனநாயகத் தன்மைகொண்டதாகவும் உயிரோட்டமுள்ளதாகவும் மாற்றுவது மிகவும் அவசியம்.

கிராமசபைக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொண்டு, நமது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி, நம் ஊரின் வளர்ச்சிக்கு வித்திடுவோம்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Last Updated : Sep 30, 2020, 6:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.