திருப்பூர் மாவட்டத்தின் மங்கலம் சாலை, ராயபுரம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றை திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மை செயலருமான கோபால் நேரில் பார்வையிட்டார்.
அப்போது, அங்கிருந்த பொதுப்பணி துறை அலுவலர்களிடம் பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் அவர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் சிவகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.