ETV Bharat / state

லஞ்ச ஒழிப்பு சோதனை: தனி வட்டாட்சியர் அதிரடி இடமாற்றம் - The municipal office of Awadhi has received Rs. 90 thousand cash seized

திருவள்ளூர்: ஆவடி நில அளவை பிரிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்தியதையடுத்து, அங்கு தனி வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த ஸ்ரீதரனை பணியிடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உத்தரவிட்டார்.

ஆவடி தனி வட்டாட்சியர் இடமாற்றம்
author img

By

Published : Oct 16, 2019, 11:22 PM IST

ஆவடி ராணுவ சாலையில் அமைந்துள்ள நில அளவை பிரிவு அலுவலகத்தில் கடந்த 10ஆம் தேதி இரவு லஞ்ச ஒழிப்பு காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் குமரகுரு தலைமையில் சோதனை நடத்தினர்.

அப்போது, அலுவலகத்திலிருந்த தனி வட்டாட்சியர் ஸ்ரீதரனிடமும் மூன்று பெண் ஒப்பந்த ஊழியர்களிடமும் விசாரணை நடத்தியதில், அலுவலகத்தில் கணக்கில் வராத 90 ஆயிரம் ரூபாய் பணமும் முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பட்டா வழங்கிவிட்டு, அதை பதிவேடுகளில் பதிவு செய்யாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து அரசுக்கு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அறிக்கை அனுப்பினர். சோதனைக்கு பிறகு தனி வட்டாட்சியர் ஸ்ரீதரன், எழும்பூரில் உள்ள டிட்கோ-பெட்டோ கெமிக் பூங்கா திட்ட தனி வட்டாட்சியராக இடமாற்றம் செய்வதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உத்தரவிட்டார். அங்கு தனி வட்டாட்சியராக பணியாற்றிய கிருபா உஷா, ஆவடி நகர நில அளவை பிரிவு தனி வட்டாட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அங்கிருந்த புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படியுங்க:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கெளரவ டாக்டர் பட்டம்!

Intro:லஞ்ச புகார் எதிரொலி ஆவடி தனி வட்டாட்சியர் ஸ்ரீதரன் பனி மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவுBody:லஞ்ச புகார் எதிரொலி ஆவடி தனி வட்டாட்சியர் ஸ்ரீதரன் பனி மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

ஆவடி புதிய ராணுவ சாலை, பழைய நகராட்சி அலுவலகத்தில் ஆவடி நகர நில அளவை பிரிவு அலுவலகம் செயல்படுகிறது. இங்கு தனி  வட்டாட்சியராக ஸ்ரீதரன் பணியாற்றி வந்தார். ஆவடி, பட்டாபிராம், கோவில்பதாகை, திருமுல்லைவாயல், அண்ணனூர், மிட்டினமல்லி மற்றும்  முத்தாபுதுப்பேட்டை ஆகிய இடங்களை சேர்ந்த மக்கள் பட்டா, பட்டா பெயர் மாற்றம் ஆகியவை பெற விண்ணப்பித்து வருகின்றனர். அவர்களது  விண்ணப்பத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து, அதன்பேரில் பட்டா, பட்டா பெயர் மாற்றம் குறித்து சான்று வழங்கி வருகின்றனர். சமீபகாலமாக இங்கு  பட்டாவுக்கு விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு, 10க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் மூலம் ₹25 முதல் ₹35 ஆயிரம் வரை லஞ்சம் பெற்றுகொண்டு பட்டா  வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. லஞ்சம் வழங்காவிட்டால் பட்டா வழங்க பல மாதங்கள் இழுத்தடித்து, ஏதேனும் காரணம் கூறி, அவர்களுக்கு  பட்டா வழங்க மறுத்து வருவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

ஆவடி பகுதியில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு, குளம், குட்டை, நீர்நிலை புறம்போக்கு, ஏரி உள்வாயில், கோயில், அனாதீனம் ஆகிய நிலங்களுக்கு  போலி பட்டா வழங்கப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர் புகார்கள் சென்றன. கடந்த 10ம் தேதி இரவு விடிய விடிய  லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி குமரகுரு  தலைமையில் போலீசார், ஆவடி நில அளவை பிரிவு அலுவலத்தில் சோதனை நடத்தினர். அங்கிருந்த சில புரோக்கர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.  அலுவலகத்தில் இருந்த தனி வட்டாட்சியர் ஸ்ரீதரன் மற்றும் 3 பெண் ஒப்பந்த ஊழியர்களிடம் விசாரித்தனர். அப்போது அலுவலகத்தில் கணக்கில் வராத  ₹90 ஆயிரம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பட்டா வழங்கிவிட்டு, அதை பதிவேடுகளில் பதிவு  செய்யாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு வேலை செய்யும் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு மாத சம்பளத்தை யார் வழங்குகிறார்கள்,  எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து அரசுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிக்கை அனுப்பினர். இந்த நிலையில், தனி வட்டாட்சியர் ஸ்ரீதரன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  இதன்படி, சென்னை எழும்பூர், டிட்கோ-பெட்டோ கெமிக் பூங்கா திட்ட தனி வட்டாட்சியராக ஸ்ரீதரன் நியமிக்கப்பட்டு உள்ளார். அங்கு தனி  வட்டாட்சியராக பணியாற்றிய கிருபா உஷா, ஆவடி நகர நில அளவை பிரிவு தனி வட்டாட்சியராக நியமனம் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி நடவடிக்கை.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.