ETV Bharat / state

தஞ்சையில் இருசக்கர வாகனங்களை திருடியவர் கைது!

தஞ்சை: திருவையாறு அருகே தொடர் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Arrest
Arrest
author img

By

Published : Sep 10, 2020, 3:56 PM IST

தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த மணத்திடல் கிராமத்தைச் சேர்ந்த பிச்சையா மகன் சுதாகர் (46). இவர் தனது இருசக்கர வாகனத்தை நடுக்காவேரி பேருந்து நிலையம் அருகில் நிறுத்தியுள்ளார்.

அப்பகுதியில் தனது வேலைகளை முடித்துவிட்டு பின்னர் வந்து பார்க்கும்போது இருசக்கர வாகனம் காணவில்லை. இது சம்மந்தமாக நடுக்காவேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதேபோல் பள்ளியக்ரஹாரத்தைச் சேர்ந்த சின்னமணி பிள்ளை மகன் சுகுமார் (59) என்பவர் தனது இருசக்கர வாகனம் மணக்கரம்பை கடைவீதியில் நிறுத்தியிருந்ததைக் காணவில்லை என்று நடுக்காவேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்தப் புகாரின் பேரில், நடுக்காவேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தை திருடிய கருப்பூர் காலனிதெருவைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் கோபிநாத் (48) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில், இருசக்கர வாகனங்களை திருடியதை அவர் ஒப்புக்கொண்டதையடுத்து கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க: வங்கியில் கொள்ளை - வெளியான சிசிடிவி காட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.