நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலையின் தாக்கம் பங்குச்சந்தையிலும் எதிரொலித்து வருகிறது. இதன் காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே பங்குச்சந்தையின் வர்த்தகமானது தொடர் சரிவுகளைச் சந்தித்து வருகிறது.
இந்நிலையில், இரண்டு நாட்கள் விடுமுறைக்குப்பின் இன்று தொடங்கிய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 222 புள்ளிகள் உயர்ந்து 37 ஆயிரத்து 191 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 61 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி வர்த்தகமாகி வருகிறது.
ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை காரணமாகவும் பொதுத்துறை வங்கிகள் இணைப்பின் காரணமாகவும் இந்த இரு துறைகளின் பங்குகளை கூர்மையாக முதலீட்டாளர்கள் கவனித்துவருகின்றனர்.