ETV Bharat / state

தந்தை கண்டித்ததால் சாணி பவுடர் குடித்து பள்ளி மாணவி தற்கொலை - School student suicide

கோயம்புத்தூர்: அன்னூரில் செல்போன் அதிகமாக உபயோகித்ததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த பள்ளி மாணவி, சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

காவல் நிலையம்
காவல் நிலையம்
author img

By

Published : Sep 11, 2020, 3:46 PM IST

கோயம்புத்தூர் அன்னூர் வடக்கலூர் பகுதியைச் சேர்ந்த நஞ்சப்பனின் மகள் கோகிலவாணி(17). அன்னூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த இவர், அதிக நேரம் செல்போனை உபயோகிப்பதால் தந்தை கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த கோகிலவாணி, நேற்று (செப்.10) மாலை சாணி பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து மயக்க நிலையிலிருந்த அவரை, சிகிச்சைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர்.

அங்கு கோகிலவாணியை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினர். இதைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனைக்கு மாணவி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், கோகிலவாணி உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.