இது தொடர்பாக அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "10, 11, 12 ஆகிய வகுப்புகளில் துணைத் தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை நாளை (17 ஆம் தேதி) முதல் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
துணைத் தேர்வில் மறுக்கூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பம் செய்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களுக்கு மட்டும் மறுக்கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவுகள் வெளியிடப்படும். பின்னர் புதிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.
இதற்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். மேலும், இது குறித்து கூடுதல் தகவல்களை தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்களைப் பெற்றுக்கொள்ள தேர்வு மையத்திற்கு வரும் தேர்வர்கள், பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
தேர்வு மையத்தில் பெற்றோர்கள் தகுந்த இடைவெளியினைக் கண்டிப்பாகப் பின்பற்றுதல் வேண்டும்" எனக் கூறியுள்ளார்.