ETV Bharat / state

'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' - விநியோகம் குறித்து ஆட்சியர் விளக்கம் - மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி

புதுக்கோட்டை: கரோனா பரவலைத் தடுக்கும் விதிமுறைகளைப் பின்பற்றினால்தான் நியாயவிலைக் கடைகளில் பொது விநியோகப் பொருள்கள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Collector Uma maheswari
மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி
author img

By

Published : Oct 6, 2020, 4:10 PM IST

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின்படி, நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் விநியோகிக்கப்பட உள்ளன. தமிழ்நாடு அரசால் தற்போது செயல்படுத்தப்பட்டுவரும் இந்தப் பொது விநியோகத் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி கூறும்போது,

"இந்தத் திட்டத்தின்படி, அத்தியாவசியப் பொருள்களைப் பெற நியாயவிலைக் கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களுக்கான பொது விநியோகத் திட்ட பொருள்கள் கைவிரல் ரேகை அங்கீகரித்தல் மூலம் விநியோகிக்கப்படும்.

அவ்வாறு விநியோகம் செய்யப்படும்போது தமிழ்நாட்டில் வசிக்கும் குடிபெயர்ந்த தொழிலாளர்களின் மின்னணு குடும்ப அட்டைக்கு இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட மத்திய வழங்கல் விலையான பொது விநியோகத் திட்டத்தில் அரிசி 1 கிலோ 3 ரூபாய்க்கும், கோதுமை 1 கிலோ 2 ரூபாய்க்கும் வழங்கப்படும்.

தமிழ்நாட்டிற்குள் அதே கிராமம் மற்றும் வார்டினைத் தவிர பிற நியாயவிலைக் கடைகளில் தங்களுக்கான பொது விநியோகத் திட்ட அத்தியாவசியப் பொருள்களை குடும்ப அட்டைதாரர்கள் சிரமமின்றி பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தோர் தங்களுக்கான உரிம பொருள்களைப் பெற தங்களது உறவினர்கள், தெரிந்தவர்களை நியமித்து நியாயவிலைக் கடையில் அத்தியாவசியப் பொருள்களைப் பெற ஏதுவாக உரிய படிவத்தில் அந்நபர்களுக்கான அங்கீகாரச்சான்று விவரங்களைப் பூர்த்திசெய்து சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் அளிக்க வேண்டும்.

அவ்வாறு பெறப்படும் படிவத்தை சம்பந்தப்பட்ட தனி வட்டாட்சியர் வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் கள ஆய்வு மேற்கொண்டு அதன்படி அந்நபர் மூலமாக மாற்றுத்திறனாளி, வயது முதிர்ந்த குடும்ப அட்டைதாரருக்கு ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட கைப்பேசி எண்ணில் பெறப்படும் ஒருமுறை கடவுச்சொல் மூலம் பொது விநியோகத் திட்ட அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

கரோனா தடுப்பு நடவடிக்கை

பொது விநியோகத் திட்ட அத்தியாவசியப் பொருள்கள் பெற வரும் குடும்ப அட்டைதாரர்கள் முகக்கவசம் அணிந்தும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தும் பொருள்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

விற்பனையாளர்கள் ஒவ்வொரு முறையும் கிருமிநாசினி கொண்டு கைரேகைப் பதிவு இயந்திரத்தை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதேபோன்று பொது விநியோகத் திட்ட பொருள்கள் பெறுவதற்காக வரும் குடும்ப உறுப்பினர்களை, அவர்களது விரல்களைக் கடையில் வைக்கப்பட்டிருக்கும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்திக் கொண்டால் மட்டுமே அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படும். எனவே இந்த அறிவுரைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்" என மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.