ETV Bharat / state

காவிரிக் கரையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஆய்வு! - கருங்கல்பாளையம்

ஈரோடு : வெள்ளப்பெருக்கு அபாயத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவிரி கரையோரப் பகுதிகளில் தேசிய பாதுகாப்பு மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

காவிரிக் கரையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு!

author img

By

Published : Oct 20, 2020, 8:12 PM IST

பருவக்காலம் நெருங்கி வரும் நிலையில் நாடு முழுவதும் நீர் நிலைப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

வெள்ளப்பெருக்கால் பொது மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாதவாறு பாதுகாக்க பொதுப்பணித்துறை, பேரிடர் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்தவர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த தேசிய பாதுகாப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆபத்தான நீர்நிலைப் பகுதிகளை இன்று (அக்டோபர் 20) நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

பேரிடர் மீட்புப் படையின் கமாண்டரும், ஆய்வாளருமான நந்தகுமார் தலைமையிலான குழுவினர் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தை அடுத்துள்ள காவிரிக் கரையில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, ஆபத்து நிறைந்த நீர்நிலைப் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிக்கொள்ளும் மக்களை சந்தித்து அவர்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த ஆய்வாளர் நந்தகுமார், "பருவக்காலங்களில் நீர் நிலைகளில் வசித்துவரும் மக்களைப் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கவும், அது குறித்த அறிக்கை தயாரிக்கவும் இதுபோன்ற ஆய்வு மேற்கொள்ளப்படுவது வழக்கம். ஆய்வுக் குழு அளிக்கும் அந்த ஆய்வு அறிக்கையின்படி, அரசு நடவடிக்கை எடுக்கும்" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.