ETV Bharat / state

உயர் நீதிமன்ற உத்தரவை வழங்க டெல்லி செல்கிறார் சமீஹா பர்வீன் - madurai hc bench

காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் தடகள சாம்பியன் போட்டியில் பங்கேற்க சமீஹா பர்வீனை அனுமதிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை, மத்திய விளையாட்டு சங்கத்திடம் வழங்க வீராங்கனை சமீஹா பர்வீன் பர்வீன் இன்று (ஆக.14) தனது தாயாருடன் டெல்லி செல்கிறார்.

madura
நீதிபதி
author img

By

Published : Aug 14, 2021, 4:51 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவியான சமீஹா பர்வீன், தேசிய காது கேளாதோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தங்க பதக்கங்களை பெற்று அசத்தியவர் ஆவார்.

இவர் போலந்து நாட்டில் இம்மாதம் 26ஆம் தேதி நடக்க உள்ள உலக காது கேளாதோர் தடகளப் போட்டியில் விளையாட தேர்வானார். ஆனால், அவருடன் போட்டிக்கு செல்லயிருந்த மற்றொரு மாணவி தகுதி இழந்ததால், ஒரு பெண்ணை மட்டும் அழைத்து செல்ல முடியாத என அலுவலர்கள் தகவல் அளித்தனர்.

பெண் என்பதால் மறுப்பதா

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சமீஹாவும் அவரது தாயாரும், அலுவலர்களின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், பெண் என்பதால் மறுப்பதா என சரிமாரி கேள்வி கேட்டதுடன் மட்டுமின்றி சமீஹா பர்வீனை போலந்துக்கு அழைத்துச் சென்று விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள வைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

madurai
தாயாருடன் சமீஹா பர்வீன்

டெல்லி செல்லும் சமீகா பர்வீன்

இந்நிலையில், காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் தடகள சாம்பியன் போட்டியில் அனுமதிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை மத்திய விளையாட்டு சங்கத்திடம் வழங்க வீராங்கனை சமீஹா பர்வீன் பர்வீன் இன்று (ஆக.14) டெல்லி செல்ல உள்ளதாக அவரது தாய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய வீராங்கனையின் தாய் சலாமத், "சமீஹா பர்வீன் தேசியளவில் 8க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார், சர்வதேச போட்டியில் தனது மகள் சமீஹா பர்வீனுக்கு பல்வேறு தடைகள் இருந்தன.

மக்களுடைய ஆதரவில் தான் இந்த இடத்திற்கு வர முடிந்தது. இந்த தீர்ப்பை கூறிய நீதிபதிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தனது மகள் போட்டியில் வெற்றி பெறுவாள் என நம்பிக்கையோடு தான் போராடி வந்தேன் அதற்கு வெற்றி கிடைத்துள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் பிரபாகரன், "இந்த வழக்கு தொடர்பாக பல வழக்குகளை மேற்கோள்காட்டி அனுமதி அளிக்க வேண்டும் என வாதிட்டேன். பொது பட்டியலில் கடைசி இடம் கொடுத்து அனுமதி கொடுக்க முடியாது என இந்திய விளையாட்டு அமைப்பு தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதி,பெண்கள் பிரிவில் ஏன் சமீஹா பர்வீனை சேர்க்கவில்லை.

உடனடியாக அவரை பட்டியலில் இணைத்து உலக தடகள சாம்பியன் போட்டியில் பங்கு பெற வைக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதனடிப்படையில் அவரது தாய் சமீஹா பர்வீனுடன் இன்று டெல்லி சென்று இந்திய விளையாட்டு அமைப்பிடம் நீதிமன்ற உத்தரவை கொடுக்க உள்ளார். போட்டியில் பங்கு பெறும் பட்சத்தில் நிச்சயமாக தங்கம் வெல்வார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வீரருக்கு தங்கம் வாங்க உதவிய பெண் - கவுரவித்த ஜமைக்கா அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.