உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. இந்திய அளவில் கரோனா பாதிப்பில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் அதன் பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் மிகத் தீவிரமடைந்துவருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 72 நபர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. 72 பேரும் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்கள் அனைவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத் துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
கோவிட்-19 பாதிப்பிற்கு உள்ளானவர்களது குடியிருப்புப் பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணியாளர்கள் மூலம் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
திருப்பத்தூரின் வாணியம்பாடி நகராட்சிப் பகுதியை கடந்து தற்போது கிராமப்புறங்களிலும் கோவிட்-19 பாதிப்பு அதிகரித்துவருவதாக அறிய முடிகிறது.
அங்கு கரோனா வைரஸ் நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை ஐந்தாயிரத்து 422 பேர் பாதிக்கப்பட்டும், நான்காயிரத்து 891 பேர் குணமடைந்து வீடு திரும்பியும் உள்ளனர்.
ஆயிரத்து 721 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர். 106 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.