ETV Bharat / state

கிராம சபைக் கூட்டங்கள் ரத்து: அரசுக்கு பி.ஆர். பாண்டியன் எச்சரிக்கை!

திருவாரூர் : ஊராட்சி மன்றத் தலைவர்களை அச்சுறுத்தி கிராம சபைக் கூட்டத்தை நடத்தவிடாமல் தடுப்பது விவசாயிகளின் குரல்வளையை நெறிக்கும் செயலென தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கிராம சபைக் கூட்டங்கள் ரத்து : தமிழ்நாடு அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை !

author img

By

Published : Oct 3, 2020, 12:32 AM IST

திருவாரூர் மாவட்டம் இருள்நீக்கி ஊராட்சியில் நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க சென்றிருந்த பி.ஆர். பாண்டியன் ஊராட்சி மன்றத் தலைவரிடம் விவசாயிகளின் தீர்மானம் குறித்த கடிதத்தை அளித்து மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க கோரினார்.

இதனிடையே, தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி கிராம சபைக் கூட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக ஊராட்சி மன்றத் தலைவர் பதிலளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர். பாண்டியன்," காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில் மத்திய அரசு விவசாயிகளுக்கு விரோதமாக கொண்டுவந்துள்ள சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் அதற்கு கண்டனம் தெரிவித்து அனைத்து ஊராட்சிகளிலும் விவசாயிகள் சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றுவதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வேண்டுகோள்விடுத்திருந்தோம்.

இதற்கு திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு கூட்டங்களை ரத்துசெய்துள்ளது.

மத்திய அரசுக்கு எதிர்நிலை உருவாகிவிடக் கூடாது என்பதற்காகவே மத்திய அரசின் தூண்டுதலால் தமிழ்நாடு அரசு கிராம சபைக் கூட்டங்களைக் கூட்ட தடைவிதித்துள்ளது.

கரோனா நெருக்கடியைக் காரணம் காட்டி கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்கு நள்ளிரவில் தடைவிதித்து, அலுவலர்கள் மூலம் ஊராட்சி தலைவர்களுக்கு தமிழ்நாடு அரசு மிரட்டல் விடுத்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கிராம சபை ஒத்திவைப்பால் தீர்மானம் நிறைவேற்றுவது என்பது தற்காலிகமாக ஒத்திப்போகுமே தவிர நிச்சயம் அடுத்த கிராம சபையில் இந்தத் தீர்மானங்களை நிறைவேற்றியே தீருவோம் என்பதை மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.