தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகம் பரவிவரும் நிலையில், விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் கடந்த மூன்று மாதங்களையும் கடந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், அடுத்த 31ஆம் தேதி கல்லூரிகள், பள்ளிகள் திறக்கப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு, மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஜூலை 13 ஆம் தேதி முதல் தனியார் பள்ளிகளில் நடத்தப்படுவதைப் போல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகமுள்ள மாவட்டங்களில் சேலம் முதலிடம் பிடித்துள்ளது.