ETV Bharat / state

பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு: அமைச்சர் செங்கோட்டையனை வறுத்தெடுத்த தங்கம் தென்னரசு! - பள்ளிக்கூடங்கள் திறப்பு

சென்னை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு தனது துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியாத வண்ணம் செய்திகள் மறைக்கப்படுகிறதா என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு : அமைச்சர் செங்கோட்டையனை வறுத்தெடுத்த தங்கம் தென்னரசு!

author img

By

Published : Sep 24, 2020, 9:37 PM IST

Updated : Sep 24, 2020, 9:54 PM IST

தமிழ்நாட்டில் கோவிட்-19 பாதிப்பு அதிகரித்து வருவதால் இப்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என கடந்த 22ஆம் தேதி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

ஆனால், இன்று தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக திமுக சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் இப்போது பள்ளிகள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்த இரண்டே நாட்களில் ‘திடீரென்று’ அக்டோபர் 1ஆம் தேதி 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் செல்லலாம் எனத் தலைமைச் செயலாளர் இன்று அறிவித்து இருக்கின்றார்.

‘விருப்பத்தின் பேரில்’ என்ற வார்த்தைகளின் பின்னால், கொரோனா தொற்று குறையாத நிலையில், ‘நமக்கேன் வம்பு’ என்று நைசாக ஒதுங்கிக் கொள்ளும் உத்தி ஒளிந்திருப்பதை எவராலும் எளிதாகவே புரிந்துகொள்ள முடியும்.

அப்படி இரண்டே நாள்களில் சாத்தியமாக்கும் இந்த ‘ ஜீபூம்பா’ வித்தைகள் தெரிந்தவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தால், ஒரே நாளில் கொரோனாவை இந்த நாட்டை விட்டே விரட்டி இருக்கலாமே.

அமைச்சர் செய்த அறிவிப்பின் ஈரம் காயும் முன்பே இப்படி ஒரு அறிவிப்பு தலைமைச் செயலாளரால் வெளியிடப்படுகிறதென்றால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்குத் தன் துறையில் என்ன நடக்கின்றது என்றே தெரியாத வண்ணம் செய்திகள் மறைக்கப்படுகின்றனவா? அல்லது பள்ளிக்கல்வித்துறை அதன் அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லையா?

மூத்த அமைச்சரின் பொறுப்பில் இருக்கும் ஒரு துறையில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் அவரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றனவா? அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சர் வெளியூரில் இருக்கும்போது அவருக்குத் தெரியாமலேயே தலைமைச் செயலகத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுப் பத்திரிகை செய்தியாக வெளிவருகின்றனவா ? நான் கேட்கவில்லை; நாட்டு மக்கள் கேட்பது என் காதில் விழுகிறது" என அதில் கூறியுள்ளார்.

Last Updated : Sep 24, 2020, 9:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.