ETV Bharat / state

சத்துணவு பள்ளி மையங்களின் பணியிடங்களில் நேரடி நியமனம்!

author img

By

Published : Sep 17, 2020, 8:22 PM IST

Updated : Sep 17, 2020, 9:03 PM IST

சென்னை : சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலமாக பணியமர்த்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

சத்துணவு பள்ளி மையங்களில் பணியிடங்கள் நேரடி நியமனம்!

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை மாவட்டத்தின் கீழ் இயங்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்ட பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பத்தாரர் சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்டு விண்ணப்பிக்கும் மையத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் சுற்றளவுக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் மையத்தின் பெயர் தெளிவாக குறிப்பிட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் கல்வி, இருப்பிடம், சாதி, விதவை, கணவரால் கைவிடப்பட்டவர் போன்ற சான்றிதழ்களின் நகல்களை இணைத்தும், ரூ.25/-க்கான தபால் தலை ஒட்டி முகவரியைத் தெளிவாக எழுதி அஞ்சல் உறையுடனும் பதிவஞ்சலில் அனுப்ப வேண்டும்.

அதனை, “ஆணையர், சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத்துறை, இரண்டாவது தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை–600 015” என்ற முகவரிக்கு 25.09.2020ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பவேண்டும். நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தகுதியற்ற விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்படமாட்டாது.

மேலும், நிரப்பப்படவுள்ள பணியிட விவரங்கள், இன சுழற்சி விவரங்கள், விண்ணப்பபடிவம் ஆகியவை www.tn.gov.in / www.middaymeal.tn.gov.in என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Sep 17, 2020, 9:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.