ETV Bharat / state

மருத்துவர் கஃபில் கான் விடுதலையை வரவேற்ற சிபிஐ (எம்) - CPM to welcome release of doctor Kafil Khan

சென்னை : தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மருத்துவர் கஃபில் கானை விடுதலை செய்த அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக சி.பி.ஐ (எம்) மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் கஃபில் கான் விடுதலையை வரவேற்ற சிபிஐ (எம்)

author img

By

Published : Sep 2, 2020, 8:05 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக மருத்துவர் கஃபில் கானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேச மாநில அரசு கைது செய்தது.

அவர் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் முதல் மதுரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அவரது தாய் நுஸ்ரத் கான் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததை அடுத்து, வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 15 தினங்களுக்குள் இது குறித்து முடிவு எடுக்குமாறு அலகாபாத் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், அவரது பேச்சை தீவிரமாக ஆய்வு செய்து அவரது பேச்சில் கலவரத்தைத் தூண்டும் வகையிலான எவ்வித வார்த்தைகளும் இல்லை எனக் கூறி அவரை விடுதலை செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது.

மதவெறி நோக்குடன் செயல்படும் மத்திய அரசும் தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்- வகையில் செயல்படும் உத்தரப் பிரதேச மாநில அரசும் தங்களுக்கு பிடிக்காதவர்களை குறிப்பாக சிறுபான்மை மக்களின் தலைவர்களையும், மக்கள் தொண்டர்களையும் குறிவைத்து வேட்டையாடுவது அன்றாட நிகழ்ச்சி ஆகிவிட்டது. அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது" என தெரிவித்துள்ளார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.