தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலருக்கு சில நாLகளாக சளி, இருமல் இருந்துள்ளது. இதையடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனை முடிவு வராத நிலையில் நேற்றிரவு இவர் குற்றாலம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, இன்று காலை அங்கு பொறுப்பேற்று பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே அவருக்கு கரோனா சோதனை முடிவில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து குற்றாலம், புளியரை ஆகிய இரண்டு காவல் நிலையங்கள் கிருமி நாசினி தெளித்து தற்காலிகமாக மூடப்பட்டன.
மேலும் இரண்டு காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் துறையினருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.