திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (21), அங்குள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் இன்று திருவள்ளூர் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் வந்த போது பேருந்து வருவதை கவனிக்காமல் வந்ததில் பேருந்தில் மோதி அதன் சக்கரத்தின் அடியில் சிக்கிக்கொண்டார். இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அரவிந்த் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த இளைஞரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பேருந்து விபத்தில் உயிரிழந்த அரவிந்த், அவரது குடும்பத்திற்கு ஒரே வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது.