புதுக்கோட்டை நகராட்சியில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு முன்கள பணிகளை தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்டனர்.
தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் இரவு பகலாக பணியாற்றி வந்த தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்காமல் புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஜஹாங்கிர் பாஷா இழுத்தடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், முழுமையான ஊதியம் தீபாவளி போனஸ் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் இன்று நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.