ETV Bharat / state

கரோனா தொடர்பான எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகனின் கேள்விக்கு முதலமைச்சர் பதில்! - Deputy Leader of the Opposition party Duraimurugan's question

சென்னை : கரோனா பரவலைத் தடுக்க அரசு முன்னெடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக நோய்ப் பரவல் தமிழ்நாட்டில் குறையத் தொடங்கியிருப்பாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தகவல் தெரிவித்துள்ளார்.

கரோனா தொடர்பான எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகனின் கேள்விக்கு முதலமைச்சர் பதில்!

author img

By

Published : Sep 16, 2020, 2:06 AM IST

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தமிழ்நாட்டின் சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் திட்டமிட்டபடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கலைவாணர் அரங்கில் மூன்றாவது தளத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான நேற்று (செப் 15) கேள்வி நேரத்தில் விவாதம் நடைபெற்றது.

அப்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது தொகுதி சார்ந்த பிரச்னைகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்தனர். அதற்குத் துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.

அதன் போது, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் கரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "கரோனா உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிற நோய் தொற்றாகும். இது ஏதோ தமிழ்நாட்டில் மட்டும் வந்தது அல்ல. இந்த நோய் தொற்று வருவதற்கு முன்பு என்னென்ன எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ, அனைத்து முன்னெச்சரிக்கையையும் எடுத்த காரணத்தால் நோய்ப் பரவல் தமிழ்நாட்டில் குறையத் தொடங்கியிருக்கிறது.

இறப்பு சதவீதம் குறைந்திருக்கிறது. குணடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதுதான் நடைமுறை. ஒரு உயிரைக்கூட இழக்கக்கூடாது என்பது அரசினுடைய நிலைபாடு. அதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஆனால், இதற்கு முழுமையான மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். எல்லோரும் நோய்வாய்ப்பட்டுதான் வந்திருக்கிறோம். எல்லோருக்கும் ஏதோ ஒரு நோய் இருக்கத்தான் செய்கிறது. அவ்வப்போது வருகிறது, அதற்குத் தகுந்த மருத்துவ சிகிச்சை எடுப்போம், பூரண குணமாகி விடுவோம். ஆனால், இந்த நோய்க்கு இன்னும் மருந்தே கிடையாது.

அப்படியிருக்கின்ற நிலையில்கூட, அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, மருத்துவ நிபுணர்கள் சொன்ன ஆலோசனைகளின்படி, அரசு எடுத்த நடவடிக்கைகளால் இன்று தமிழகத்தில் நோய்ப் பரவல் குறைந்திருக்கிறது. மற்ற மாநிலங்களில் எல்லாம் இந்த நோய் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் குறிப்பிட்டதைப் போல, நோய்ப் பரவல் தமிழ்நாட்டில் குறையத் தொடங்கியிருக்கிறது.

அது அரசு எடுத்த நடவடிக்கைகளால் தான் என்பதை எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு உயிர்கூட போகக்கூடாது என்பது என்னுடைய விருப்பம் மட்டுமல்ல, நம் அனைவருடைய விருப்பமும் ஆகும். சட்டமன்ற உறுப்பினர்கூட இந்த நோய் தொற்றால் இறந்திருக்கிறார். அவர் இறப்பதற்கு முன் ஒரு பேட்டி கொடுக்கின்றார்.

அந்தப் பேட்டியில், ஒவ்வொருவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், எனக்குக் கூட நோய்கள் இருக்கின்றது, என்னுடைய மருத்துவர், நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அறிவுரை அளித்துள்ளார். இருந்தாலும், நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கின்ற காரணத்தினாலே பணி செய்ய வேண்டுமென்பதால், ஒரு மணி நேரம்தான் வெளியே செல்கின்றேன். அப்பொழுதுகூட, பாதுகாப்பாக இருக்கிறேன் என்று தெளிவுபட கூறியிருக்கிறார்.

அப்படியிருந்தும் கூட, இந்த நோய் தொற்றால் தாக்கப்பட்டு இறந்திருக்கிறார் என்று சொன்னால், இந்த நோயினுடைய வீரியம் எந்தளவிற்கு இருக்கின்றது என்பதை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அறிய வேண்டும் என்று அன்போடு கேட்டு கொள்கிறேன்.

இந்நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு எந்த அளவிற்கு பாடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பதை தங்கள் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவருக்கும் உயிர் முக்கியம். வாழவேண்டுமென்றுதான் அனைவரும் பிறந்தோம். அதற்கு வேறுபாடே கிடையாது. எனவே, உயிரைக் காப்பது அரசின் கடமை. அந்த அடிப்படையில்தான் அனைவருக்கும் தெரிவிக்கிறோம்.

எல்லா தொலைக்காட்சிகளிலும் தினந்தோறும் அறிக்கை வெளியிட்டுக் கொண்டு வருகிறோம். நடிகர்களை வைத்து மக்களுக்கு எளிதாக புரியக்கூடிய வகையில், இந்த நோய் எவ்வாறு பரவுகிறது, இந்த நோய்ப் பரவலை எவ்வாறு தடுக்க முடியும்என்ற விவரங்களை அன்றாடம் ஊடகத்தின் மூலமாக தெரிவித்துக் கொண்டே இருக்கிறோம்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.