ETV Bharat / state

தாயைப் பராமரிக்கத் தவறிய மகன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிமன்றம்! - Chennai High Court orders action against son for failing to care for mother

காஞ்சிபுரம்: பெற்ற தாயை ஏமாற்றி சொத்துகளை எழுதிவாங்கிய மகனுக்கு எதிரான புகார் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென காஞ்சிபுரம் ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாயை பராமரிக்கத் தவறிய மகன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

author img

By

Published : Sep 26, 2020, 8:15 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரிக்கையைச்சேர்ந்த நடராஜன் - ராஜலட்சுமி தம்பதியருக்கு மூன்று மகள்களும், மூன்று மகன்களும் உள்ளனர்.

மகள்கள் மூவரும் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் வாழ்ந்துவருகின்றனர். அதேபோல, முதல் இரு மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் நடத்திவருகின்றனர்.

நடராஜன் இறந்துவிட்ட நிலையில், சிறு வியாபாரம் மூலம் சொற்ப வருமான ஈட்டிவரும் மூதாட்டி ராஜலட்சுமியுடன் திருமணமாகாத மூன்றாவது மகன் வசித்துவருகின்றார்.

மூதாட்டி ராஜலட்சுமியின் முதல் மகன் கிருபாசேகரன் திருமணமானது முதல் தனியாக வசதியுடன் வாழ்ந்துவருவதாக கூறப்படுகிறது.

தனது தாய், தந்தை, சகோதர சகோதரிகள் குறித்து எந்தவொரு கவலையும் கொள்ளாமல் 20 ஆண்டுகள் தனியே வாழ்ந்துவந்த அவர், 2016ஆம் ஆண்டு திடீரென குடும்பத்துடன் நெருக்கமாகி உள்ளார்.

தங்களுக்கு கடன் தொல்லை அதிகரித்துள்ளதாக கிருபாசேகரனும், அவரது மனைவியும் ராஜலட்சுமியிடம் நாடகமாடி உள்ளனர்.

அதனைச் சமாளிக்க ராஜலட்சுமியின் பெயரில் அங்கம்பாக்கத்தில் இருக்கும் வீட்டுமனையை அடைமானம் வைத்துக் கொள்ள அனுமதி கேட்டுள்ளனர்.

இடத்தை அடைமானம் வைப்பதற்காக எனக் கூறி வாலாஜாபாத் சார் பதிவாளர் அலுவலகத்தில் மூதாட்டி ராஜலட்சுமியிடம் கையெழுத்து வாங்கி மோசடியாக தங்கள் பெயருக்குச் செட்டில்மென்ட் எழுதியுள்ளனர்.

மூத்த மகனும், மருமகளும் செய்த மோசடி அண்மையில்தான் ராஜலட்சுமிக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, மூத்த மகன் கிருபாசேகரன் மீது கடந்த ஜூலை மாதம் மாவட்ட ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர், சார் பதிவாளர் ஆகியோரிடம் மூதாட்டி ராஜலட்சுமி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்தப் புகார் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மூதாட்டி ராஜலட்சுமி மனு ஒன்றினைத் தாக்கல்செய்திருந்தார்.

அதில், "பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களிடம் சட்டத்திற்குப் புறம்பாக மோசடியான முறையில் செய்த சொத்து பத்திரப் பதிவை ரத்துசெய்யும் சட்டத்தின்கீீீழ் அதனை ரத்து செய்து, பராமரிப்பு மற்றும் நலச் சட்டத்தின்கீழ் தன்னை முறையாகப் பராமரிக்க மகன் கிருபாசேகரனுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" எனக் கோரிக்கைவைத்துள்ளார்.

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், வழக்கில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியரை எதிர்மனுதாரராகச் சேர்த்ததுடன், மூதாட்டி ராஜலட்சுமியின் புகார் குறித்து இரு தரப்பிலும் விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிட்டார்.

அந்த அறிக்கையைப் பெற்று பெற்றோர் பராமரிப்புச் சட்டத்தின்கீழ் உரிய நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் உடனடியாக எடுக்க வேண்டுமென பரிந்துரைத்து வழக்கை முடித்துவைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.